ஜோதிடம்

10-08-2024 இன்றைய ராசி பலன்!

இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை சாதகமாக இருக்கும்!

News Tremor Desk

மேஷம்

மேஷம்

புத்திசாலித்தனம் காரணமாக சாதகமான நாளாக மாறும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலையைச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இனிய சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.

ரிஷபம்

ரிஷபம்

மனதில் அமைதி குறையலாம். கவனச்சிதறல் அதிகரிக்கலாம். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்தால் அமைதியான நாளாக அமையும். வேலைப் பளு அதிகரிக்கும். உடன் பணி புரிபவர்களுடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் இனிமையான சூழல் இருக்காது. விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. நிதி நிலை கவலையை அளிக்கும். செலவுகள் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

மிதமான பலன்கள் கொண்ட நாளாக இருக்கும். சவால்களை உறுதியுடன் எதிர்கொண்டால் சாதகமாக மாறும். வேலை சூழல் கடினமாக இருக்கும். வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் அதிகரிக்கலாம். பண வரவுக்கு சிறிதளவு வாய்ப்பு இருந்தாலும் செலவு அதை விட அதிகமாக இருக்கும்.

கடகம்

கடகம்

இனிமையான நாளாக இருக்கும். சாதகமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்மம்

துடிப்பான நாளாக இருக்கும். எதையும் லேசாக எடுத்துக்கொண்டால் முன்னேற்றம் கிடைக்கும். வேலையில் கூடுதல் பொறுப்புக்கள் உங்களைத் தேடி வரும். திட்டமிட்டமிட்டு செயல்பட்டால் சாதிக்கலாம். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணப் புழக்கம் சிறிது சாதகமாக இருக்கும். செலவு விஷயத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை.

கன்னி

கன்னி

ஓரளவுக்குத்தான் சுமுகமான நாளாக இருக்கும். கடின உழைப்பை வெளிப்படுத்தினால் சாதகமான நாளாக மாறும். வேலையில் உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகள் வரலாம். இதன் காரணமாக வேலையில் தடுமாற்றம் ஏற்படலாம். குடும்பத்தில் கோபத்தை வெளிப்படுத்துவீர்கள். இதனால் கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் பாதிக்கப்படலாம். நிதி நிலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். பண விஷயத்தில் முன்னெச்சரிக்கையுடன் நடப்பது நல்லது.

துலாம்

துலாம்

மகிழ்ச்சியான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு உத்வேகத்தை அளிக்கும். வேலையை சுறுசுறுப்பாகச் செய்வீர்கள். திட்டமிட்டு செயல்படும் போது வெற்றி கிட்டும். குடும்பத்தில் அதீத உணர்ச்சிப் பெருக்கை வெளிப்படுத்துவீர்கள். இதன் காரணமாக உறவில் மகிழ்ச்சி குறைவு ஏற்படலாம். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு சாதகமான நாளாக இருக்கும். வெற்றிகளைக் காண்பீர்கள். வேலையைத் தெளிவுடன் விரைவாக செய்து முடிப்பீர்கள். உடன் பணி புரிபவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். கணவன் மனைவி இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

தனுசு

தனுசு

புத்துணர்ச்சி அளிக்கும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உங்களுக்கான வேலையை விரைவாக, சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நட்புறவு நிலவும். வாழ்க்கைத் துணைவர் வழியில் சாதகமான பலன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.

மகரம்

மகரம்

சற்று மந்தமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் தள்ளிப்போகலாம். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வேலை சூழல் பரபரப்பாக இருக்கும். ஓய்வு எடுக்க முடியாத அளவுக்கு வேலைப் பளு அதிகரிக்கும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் மன வருத்தம் ஏற்படலாம். நிதி நிலை சாதகமாக இருக்காது. சேமிப்பு கரையும் நிலை வரலாம்.

கும்பம்

கும்பம்

அனுகூலமான நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்பட்டால் சாதிக்கலாம். வேலையை விரைவாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் காணப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். அதே நேரத்தில் பணத்தைக் கையாளும் போது கூடுதல் கவனம் தேவை.

மீனம்

மீனம்

அதிர்ஷ்டம் வாய்ப்பும் நிறைந்த நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்றைய நாளில் எடுக்கலாம். வேலை சூழல் சிறப்பாக இருக்கும். திறமையை வெளிப்படுத்திச் சாதிப்பீர்கள். இதனால் உடன் பணி புரிபவர்கள், உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது.