உங்கள் ராசி அடிப்படையில் உங்களின் இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை அறிந்துகொள்ள உதவும் சிறப்பு பலன்கள் இங்கே!
மகிழ்ச்சியான நாளாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, உற்சாகம் அதிகரிக்கும். வேலை சூழல் சுறுசுறுப்பாக இருக்கும். குறித்த நேரத்திற்குள் வேலையை முடித்துப் பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இனிமையாக நடந்துகொள்வீர்கள். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். நிதி நிலை சாதகமாக இருக்கும். ஆக்கப்பூர்வமான வழியில் செலவு செய்வீர்கள்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். ஆன்மிக காரியங்களில் ஈடுபடுவது மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். வேலை சூழல் சற்று கடினமாக இருக்கலாம். கவனத்துடன் செயல்பட்டால் தவறுகள் ஏற்படாமல் தடுக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் கணவன் மனைவி இடையே அமைதியைத் தக்க வைக்கலாம். பண வரவுக்கு வாய்ப்பு குறைவு. செலவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்டம் குறைவான நாளாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வேலை சூழல் மகிழ்ச்சியாக இருக்காது. உடன் பணி புரிபவர்களால் பிரச்னைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே மன வருத்தம் ஏற்படலாம். செலவுகள் கவலையை அளிக்கும். செலவுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை.
விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வேலை சூழல் முன்னேற்றம் அளிக்கும் வகையில் இருக்கும். மற்றவர்கள் பொறாமைப் படும் வகையில் வேலையை சிறப்பாக செய்வீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் - மனைவி இடையே நல்லிணக்கம் இருக்கும். பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும்.
முயற்சிகள் வெற்றிபெறும் நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உயர் அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். குடும்பத்தில் ஆரோக்கியமான முறையில் விவாதங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நிதி நிலை திருப்திகரமாக இருக்கும். பயனுள்ள வகையில் செலவு செய்யுங்கள்.
மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இதுநாள் வரை செய்து வந்த காரியங்களுக்கு நற்பலனை அனுபவிப்பீர்கள். வேலையில் மும்முரமாக ஈடுபடுவீர்கள். அது உங்களுக்குத் திருப்தியை அளிக்கும் வகையில் இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு நிலவும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு இருக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். முதலீடு தொடர்பான முடிவுகளை இன்று எடுக்கலாம்.
அமைதி, நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். மனதைக் கட்டுப்படுத்தி நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். வேலைப் பளு அதிகரிக்கும். குறித்த நேரத்தில் வேலையை முடிக்க முடியாத சூழல் ஏற்படலாம். குடும்பத்தில் அகந்தை உணர்வு காணப்படும். இதனால் கணவன் மனைவி உறவில் பாதிப்பு ஏற்படலாம். பண பற்றாக்குறை ஏற்படலாம். குடும்பத்தின் தேவைக்காக செலவு செய்வீர்கள்.
பலன்கள் நிறைந்த நாளாக இருக்கும். சவால்களை எதிர்கொண்டு சாதிப்பீர்கள். வேலையில் வெற்றிகரமான சூழல் இருக்கும். பணி சூழல் மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் அளிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள்.
வளர்ச்சிக்கான நாளாக இருக்கும். மற்றவர்களுடன் கனிவாகப் பேசுவதன் மூலம் சாதகமான பலனைப் பெறுவீர்கள். வேலை சூழல் சாதகமாக இருக்கும். உங்களுக்கான வேலையை நேர்மையான முறையில் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் திருப்தியான மனநிலை இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்படும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். தேவைகள் நிறைவேறும்.
ஓரளவுக்கு சாதகமான நாளாக இருக்கும். மனதை அமைதியாகவும், தெளிவாகவும் வைத்துக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். வேலையில் தடுமாற்றங்கள் ஏற்படலாம். கூடுதல் கவனத்துடன் செயல்படும் போது தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். குடும்பத்தில் ஓரளவுக்கு மகிழ்ச்சியான சூழல் இருக்கும். கணவன் மனைவி இடையே புரிந்துணர்வு ஏற்பட முயற்சி செய்ய வேண்டும். நிதி நிலை சாதகமாக இருக்காது. செலவுகள் கவலையை அதிகரிக்கச் செய்யும்.
வளர்ச்சியில் சிறிது தடை ஏற்பட்டு மறையும். சிந்தித்து, திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வேலையில் தவறுகள் ஏற்படலாம். உயர் அதிகாரியுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் அமைதி குறையலாம். கணவன் மனைவி இடையே தர்மசங்கடமான சூழல் ஏற்படுவதைத் தவிர்க்க அமைதியாக இருப்பது நல்லது. பண வரவுக்கு சிறிது வாய்ப்பு உள்ளது. இருப்பினும் வீண் செலவுகள் ஏற்படலாம்.
சிறப்பான நாளாக இருக்கும். இன்றைய நாளில் நடக்கும் நிகழ்வுகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆக்கப்பூர்வமான முறையில் வேலையை செய்வீர்கள். கடினமான காரியத்தையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அன்பான சூழல் நிலவும். கணவன் மனைவி இடையே நல்லிணக்கம் நன்றாக இருக்கும். நிதி நிலை ஓரளவுக்கு சாதகமாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.