இயக்குநர் மகிழ்திருமேனியின் ‘விடாமுயற்சி’ படத்தை முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இதன் முதல் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தற்போது ஸ்பெயினில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்தப் படத்தில் ஆன்ட்டி ஹீரோவாக அஜித் நடிக்கிறார் என்பதை படத்தின் போஸ்டர்கள் உணர்த்தியது. அதேபோல, சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து படமாக்கப்படும் காட்சிகள் சில இணையத்தில் கசிந்தது.
இதில் அஜித்குமாரின் ஸ்டைலிஷான லுக்கைப் பார்த்து ரசிகர்கள் ''பில்லா இன்னும் சாகல'' என சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அந்த அளவுக்கு உடல் எடை குறைத்து கோட்-சூட்டுடன் ஸ்டைலிஷான லுக்கில் அஜித் இருந்தார். அவரது வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கும் இதில் மிஸ்ஸாகவில்லை. இந்த லுக் கசிந்ததில் படக்குழு பயங்கர் அப்செட் என்கின்றனர். இனிமேல், இதுபோன்று நடக்க்கூடாது என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படக்குழுவினரை எச்சரித்தாராம். இருந்தாலும், இப்போது அஜித்தின் ஸ்டைலிஷான இந்த தோற்றத்தை ஆதிக்கே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, '' 'குட் பேட் அக்லி’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து அஜித்'’ என அப்டேட் கொடுத்திருக்கிறார். இந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.