நடிகர் அஜித் 
சினிமா

வெறித்தனமாக கார் ரேஸூக்கு தயாராகும் அஜித்... வெளியான வீடியோ!

நடிகர் அஜித் வெறித்தனமாக கார் ரேஸ் பந்தயத்திற்கு தயாராகும் புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

Aathira

கார் ரேஸ், பைக், விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகர் அஜித்குமார். படப்பிடிப்பு இடைவேளையின்போது தனது பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் அலாதி பிரியம் கொண்டவர். உலக நாடுகள் பலவற்றிற்கும் மற்றும் இந்தியாவில் பல இடங்களிலும் பைக்கிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அஜித் அதிவேகமாக கார் மற்றும் பைக் ஓட்டும் வீடியோக்களும் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். இந்த நிலையில் அஜித்குமார் மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்க இருக்கிறார் என்ற செய்தியை சமீபத்தில் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் உறுதிப்படுத்தினார்.

இந்த நிலையில் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் பக்கத்தில் அஜித் கார் ரேஸூக்கு தயாராகும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்திருக்கிறார். அதில், துபாயில் உள்ள ஆர்டோம் கார் ரேஸ் மைய்யத்தில் ஃபெராரி 488 இ.வி.ஒ சேலஞ் காரை செஸ்ட் செய்துக் கொண்டிருக்கும் அஜித்குமார், நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ரேஸிங் சீசனுக்கு தயாராகி வருகிறார். அஜித்குமார் Adrenalin Fueled பந்தயத்திற்கு ரெடி எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும், 'சர்வதேச அரங்கிலும் எஃப்ஐஏ சாம்பியன்ஷிப் பந்தயத்தில் ஈடுபடும் மிகச் சில இந்தியர்களில் அஜித்தும் ஒருவர். அவர் 2004 ஃபார்முலா ஆசியா BMW F3 சாம்பியன்ஷிப்பில் போட்டியிட்டார். மேலும் அவர் 2010 ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றார்'' எனவும் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இதோடு நடிகர் அஜித் பந்தயத்திற்கு தயார் என்பதை சொல்லும் வகையில் தானே எடுத்த செல்ஃபி வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.