மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வந்த ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்தின் போர்ஷன் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் அவர் நடித்து வருகிறார். அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருக்கிறது. நெகட்டிவ் ஷேடிலும் இந்தப் படத்தில் அஜித் நடிக்கிறார் என்பது போஸ்டர்கள் வாயிலாக தெளிவாகியுள்ளது.
இதுமட்டுமல்லாது, இந்தப் படத்துக்காக உடல் எடையைக் குறைத்து செம ஸ்டைலிஷான தோற்றத்தில் வலம் வருகிறார் அஜித். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் நடந்து வருகிறது. அங்கு தனது குடும்பத்தையும் அழைத்து சென்றிருக்கும் அஜித் ஸ்பெயின் வீதிகளில் ஷாலினியுடன் ரொமான்டிக் வாக் சென்ற வீடியோக்களும் இணையத்தில் வைரலானது.
இப்போது ‘குட் பேட் அக்லி’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் கசிந்துள்ளது படக்குழுவினரை அப்செட் ஆக்கியுள்ளது. “அஜித் போன்ற ஒரு பெரிய நடிகர் நமக்குக் கிடைத்திருக்கும்போது இப்படி கவனக்குறைவாக இருக்கக் கூடாது. படம் வெளியாவதற்கு முன்பே காட்சிகள் கசிந்தால் அது ரசிகர்கள் மத்தியில் சுவாரஸ்யமின்மையை ஏற்படுத்தி விடும். இனி இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என ஆதிக் தனது உதவி இயக்குநர்கள் உள்பட படக்குழுவினரை எச்சரித்திருக்கிறார்.