நயன்தாரா, விக்னேஷ்சிவன் 
சினிமா

நயன்தாரா மகன்களின் இரண்டாவது பிறந்தநாள்... உருக்கமாகப் பதிவிட்ட விக்கி-நயன்!

நடிகை நயன்தாரா தனது மகன்களின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு உருக்கமான பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

Aathira

நடிகை நயன்தாரா தனது மகன்கள் உயிர் மற்றும் உலக் இருவரின் பிறந்தநாளுக்காக எமோஷனலான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட ஒரு வருடத்திற்குள்ளாகவே உயிர் மற்றும் உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்தனர். ஷூட்டிங், அவுட்டிங் என எங்கு வெளியே சென்றாலும் தனது குழந்தைகளையும் உடன் அழைத்து செல்பவர்கள் அங்கு இருவரின் கியூட்டான தருணங்களையும் அவ்வப்போது தனது சமூகவலைதளங்களில் பகிரத் தவறுவதில்லை.

இப்போது இருவரின் இரண்டாவது பிறந்தநாள் என்பதால் அவர்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து உருக்கமான பிறந்தநாள் பதிவு ஒன்றை கூறியுள்ளார் நயன்தாரா.

அந்தப் பதிவில், ‘என்னுடைய அழகன்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நான் உங்களுடன் செலவிடும் ஒவ்வொரு நொடியும் என் வாழ்நாள் முழுவதும் உங்களுக்காகதான் என தோன்ற வைக்கிறது. நீங்கள்தான் என் மந்திரம். என் வாழ்வில் வந்ததற்கு நன்றி. உங்கள் மீது நான் எவ்வளவு அன்பு செலுத்துகிறேன் என்பதை வார்த்தையால் விவரிக்க முடியாது. உங்கள் வாழ்வை கடவுள் நல்ல விஷயங்களால் ஆசீர்வதிக்கட்டும்’' எனக் கூறியிருக்கிறார்.

அதேபோல விக்னேஷ் சிவனும் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில், ‘'உங்களுக்கு உயிர் & உலகம் எனப் பெயரிட நினைத்தபோது அதுவாகவே நீங்கள் எங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அப்படித்தான் உள்ளீர்கள்! அம்மா, அப்பா மற்றும் மொத்த குடும்பமும் உங்களால் சந்தோஷமாக உள்ளோம். இதுபோல இதற்கு முன்பு சந்தோஷமாக இருந்தோமோ எனத் தெரியவில்லை. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும். பிறந்தநாள் வாழ்த்துகள்!’ என்றிருக்கிறார். ரசிகர்களும் உயிர், உலகிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.