நடிகை சமந்தா- நாகசைதன்யா 
சினிமா

அம்மாவாக ஆசைப்பட்ட சமந்தா... உண்மையை உடைத்த பிரபலம்!

நடிகை சமந்தா பட வேலைகளை சீக்கிரம் முடித்துக் கொடுத்துவிட்டு குழந்தைப் பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டதாக பிரபலம் ஒருவர் உண்மையை உடைத்திருக்கிறார்.

Aathira

நடிகை சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் கடந்த 2021ல் விவாகரத்து ஏற்பட்டது. அதன் பிறகு நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபலாவை கடந்த 8ஆம் தேதி நிச்சயம் செய்து கொண்டார். இதனையடுத்து சமந்தா- நாகசைதன்யா இருவருக்கும் இடையில் ஏன் விவாகரத்து ஆனது என்ற செய்தி மீண்டும் இணையத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கி இருக்கிறது. தனது படங்களிலேயே சமந்தா அதிகம் கவனம் செலுத்தியதாகவும், குழந்தை பெற்று கொள்ள அவர் மறுத்ததே விவாகரத்துக்கு முக்கிய காரணம் என சொல்லப்பட்டது.

ஆனால், அதில் உண்மை இல்லை என்பதை சமந்தா நடித்த ‘சாகுந்தலம்’ படத்தின் தயாரிப்பாளர் நீலிமா குணா சமீபத்திய பேட்டி ஒன்றில் உடைத்துப் பேசியிருக்கிறார். சமந்தா விவாகரத்துப் பெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் ‘சாகுந்தலம்’ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தை விரைவில் முடித்துத் தருமாறு தயாரிப்பாளரிடம் சமந்தா கோரிக்கை வைத்திருக்கிறார்.

அதற்கு காரணமாக சமந்தா சொன்னது தான் சீக்கிரம் குழந்தைப் பெற்று, நாக சைதன்யாவுடன் நேரம் செலவிட இருப்பதாகவும், சினிமாவில் இருந்து பிரேக் எடுக்க விரும்புவதாகவும் அவர் சொல்லி இருக்கிறார். இதற்காக, ‘சாகுந்தலம்’ படத்தையும் நீலிமா சீக்கிரம் முடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால், அதற்குள் இவர்களது விவாகரத்து நடந்து விட்டது என்பதையும் நீலிமா வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.