தீபக் பஹா தயாரிப்பில் லோகேஷ் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய திகில் மற்றும் ஃபேன்டசி திரைப்படமாக உருவாகிறது 'தி லாஸ்ட் ஒன்'. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இப்போதும் 'அந்தகன்' உள்பட தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில், தனது புதிய படத்தை அறிவித்திருக்கிறார். இந்தப் படத்தை சிம்ரனின் கணவர் தீபக் தயாரிக்கிறார்.
சிம்ரனை இதுவரை ரசிகர்கள் கண்டிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்கிறார்கள் படக்குழுவினர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பான்-இந்திய படமாக 'தி லாஸ்ட் ஒன்' உருவாகிறது. சமீபத்தில் இவர் நடித்த 'குல்மோஹர்', 'ராக்கெட்ரி' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்றதோடு மதிப்புமிக்க தேசிய விருதுகளையும் வென்றன. சிம்ரனின் திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் படமாக 'தி லாஸ்ட் ஒன்' இருக்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.