தமிழ் சினிமாவில் டிரெண்டிங் இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். அஜித், விஜய், ரஜினி, ஷாருக்கான் என இந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரின் படங்களுக்கும் இவர்தான் இசையமைக்கிறார்.
இதுபற்றி சமீபத்திய பேட்டியில் தன்னுடைய அடுத்தடுத்தப் படங்கள் பற்றி பேசியிருக்கிறார். "நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி', ரஜினியின் 'கூலி' மற்றும் ஷாருக்கானின் ஒரு படத்திற்கு இசையமைக்க வேண்டியுள்ளது. இது இல்லாமல் இன்னும் சில சில படங்கள் உள்ளது. அதைப் பற்றி இப்போது சொல்ல முடியாது.
இன்னும் 10 மாதங்களில் 50 பாடல்களுக்கு இசையமைக்க வேண்டும். இதையெல்லாம் இப்போது நினைத்தாலே எனக்கு தலைவலிப்பது போல இருக்கிறது. அநேகமாக நடிகர் அஜித்தின் 'விடாமுயற்சி' திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகும் பொங்கலுக்கு வெளியாகும் என நினைக்கிறேன். எனக்கு நானே வாழ்த்துக்கள் சொல்கிறேன்" எனப் பேசியிருக்கிறார் அனிருத்.
நடிகர் அஜித்தின் 'குட் பேட் அக்லி' திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 'விடாமுயற்சி'யும் பொங்கலுக்கு வெளியாகிறது என அனிருத் சொல்லியிருப்பது ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ரஜினியின் 'வேட்டையன்' திரைப்படத்தில் அனிருத்தின் இசை பாராட்டப்பட்டது. மேலும், ஜூனியர் என்டிஆர்-ன் 'தேவரா' படத்திற்கும் இவர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.