தமிழ் சினிமாவின் தல அஜித், தனது திரையுலக பயணத்தில் 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அஜித். பார்த்ததும் பிடிக்கும் தோற்றம், சிறப்பான நடிப்பு என ஹீரோ மெட்டீரியல் என்றாலும் உடனே தமிழ் திரையுலகம் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
பல கட்ட போராட்டங்கள், தோல்விகளை சந்தித்தப் பின்பே அவருக்கான தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க முடிந்தது. அந்த போராட்டங்களையும் வலிகளையும் குறிப்பிடும் விதமாக, பிளாக் அண்ட் ஒயிட் வண்ணத்தில் ரத்தம் வடியும் முகத்துடன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது ‘விடாமுயற்சி’ படக்குழு. அதில், ‘32 ஆண்டுகள் தீரா சாதனைகளும் ஆறா ரணங்களும் யாவையும் எதிகொண்டு வெல்லும் விடாமுயற்சி’ என்ற கேப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
’விடாமுயற்சி’ படத்துக்கு அடுத்து அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இருந்தும் முக்கிய அப்டேட் இன்று மாலை கொடுக்க இருக்கிறது படக்குழு. ஒரே நாளில் அஜித்தின் இரண்டு படங்களின் அப்டேட் அடுத்தடுத்து வருவது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.
அஜித் தனது 32 ஆண்டுகால பயணத்தில் தமிழ் சினிமாவில் தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் உயர்ந்து நிற்கிறார். ஓப்பனிங் கிங் என கொண்டாடப்படும் அஜித் விடாமுயற்சியும், தகராத தன்னம்பிக்கைக்கும் சிறந்த உதாரணம். அடுத்தடுத்து வரும் படங்கள் அவரை இன்னும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் என துணிவுடன் சொல்லலாம்!