சினிமா

ஆகஸ்ட் 15 ரிலீஸ் : 'தங்கலான்’ டூ ‘டிமாண்டி காலனி’... நாளை வெளியாகும் படங்கள் என்னென்ன?

இந்தியாவின் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியான நாளை வரிசைக்கட்டி படங்கள் ரிலீஸாகின்றன. என்னென்ன படங்கள் பார்க்கலாம்?!

Aathira

சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை ஒட்டி பல படங்கள் வெளியாகிறது. அவை என்னென்ன என்பது பற்றி இதில் பார்க்கலாம்.

’தங்கலான்’

பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘தங்கலான்’ நாளை வெளியாகிறது. பொதுவாக தன் படங்களுக்கு உடலை உருக்கி உழைப்பைக் கொடுக்கும் விக்ரம் இந்தப் படத்துக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகவே கொடுத்திருக்கிறார் என்பதை படத்தின் புரோமோஷன் வீடியோக்கள் காட்டியிருக்கிறது.

’பொன்னியின் செல்வன்’ வெற்றிக்குப் பிறகு விக்ரம் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திமுக அரசுக்கு எதிராக இயக்குநர் பா.இரஞ்சித் பேசியது, சமீபத்தில் ரசிகர்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு விக்ரமின் சர்ச்சை பதில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரூ. 1 கோடி கொடுக்க வேண்டும் என்ற வழக்கு எனப் பல தடைகளை மீறி நாளை வெளியாகிறது ‘தங்கலான்’.

‘டிமாண்டி காலனி2’

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ’டிமாண்டி காலனி’ திரைப்படம் கடந்த 2015-ல் வெளியானது. நகைச்சுவை, சீட்டை விட்ட நகர முடியாத த்ரில்லர் என ரசிகர்களைக் கட்டிப்போட்டு வெற்றிப் பெற்றது ‘டிமாண்டி காலனி’. அதன் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட இன்னும் சிறப்பாக வந்திருப்பதாக விமர்சனங்கள் வரத் தொடங்கி இருப்பதால் இந்தப் படமும் ரசிகர்களின் டாப் லிஸ்ட்டில் இருக்கிறது.

‘ரகு தத்தா’

கதாநாயகியை மையப்படுத்திய படமாக நடிகை கீர்த்தி சுரேஷின் ‘ரகு தத்தா’ நாளை வெளியாகிறது. இந்தி திணிப்பு மற்றும் பெண்ணியம் பேசும் படமாக இது உருவாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘டபுள் ஐஸ்மார்ட்’

பான் இந்தியா படமாக ராம் பொதினேனியின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ படம் நாளை வெளியாகிறது. இயக்குநர் பூரி ஜெகன்நாத்- ராமின் முந்திய படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வல் இந்தப் படம்.

‘வேதா’

நிகில் அத்வானி இயக்கத்தில் தமன்னா, ஜான் ஆபிரகாம் நடிப்பில் ஆக்‌ஷன் டிராமா படமாக இந்தியில் நாளை வெளியாகிறது ‘வேதா’.