சினிமா

'GOAT' விஜய்க்கு நடனத்தில் செம டஃப் கொடுத்த ஜப்பான் ரசிகர்கள்; வைரல் வீடியோ!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'GOAT' படத்தில் இடம்பெற்றிருக்கும் ''மட்ட'' பாடலுக்கு ஜப்பான் ரசிகர்கள் அசத்தலான நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

Aathira

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், சிநேகா உள்ளிட்டப் பலர் நடிப்பில் கடந்த வாரம் 'GOAT' படம் வெளியானது. முதல் நாளிலேயே இந்தப் படம் உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்ததாக படக்குழு அறிவித்தது. படத்திற்கு முன்பு வெளியான பாடல்களில் யுவனின் இசை ரசிகர்களைப் பெரிதாக திருப்திப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், படம் வெளியான பின்பு அவரது பின்னணி இசையும் குறிப்பாக, த்ரிஷா நடனம் ஆடிய ‘மட்ட’ பாடலும் ஹிட்டானது. இந்தப் பாடலுக்குதான் ஜப்பானை சேர்ந்த விஜய் ரசிகர்கள் நடனம் ஆடி இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் இணையத்தில் தீயாய் பரப்பி வருகின்றனர்.

படத்தின் எடிட் செய்யப்படாத முழுநீள வெர்ஷனையும் ஓடிடியில் வெளியிட முயற்சி செய்கிறோம் என இயக்குநர் வெங்கட்பிரபு கூறியிருந்தார். 'GOAT' படத்திற்குப் பிறகு விஜய் சினிமாவில் தன்னுடைய கடைசிப் படமாக ‘தளபதி 69’ படத்தை அறிவித்து இருக்கிறார். ஹெச். வினோத் இயக்கும் இந்தப் படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகைகள் சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.