நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். திரைக்கதையை லாக் செய்துவிட்ட நிலையில் நடிகர்களின் தேர்வு தீவிரமாக நடந்துவருகிறது.
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவரும் ‘டாடா’, ‘ஸ்டார்' படங்களில் நடித்து நம்பிக்கை நடிகர்களில் இடம்பெற்றிருப்பவருமான கவினிடம் கதை சொன்னார் ஜேசன் சஞ்சய். ஆனால், கால்ஷீட் பிரச்சனை என்று சொல்லி கவின் விலக, இப்போது துருவ் விக்ரமை இறுதி செய்திருக்கிறார்கள். 'பைசன் காளமாடன்' படம் முடிந்ததும் துருவ் விக்ரம் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் நடிக்கயிருக்கிறார்.
ஹீரோயினாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி அல்லது கெளதமியின் மகள் சுப்புலட்சுமி இருவரில் யாரைத் தேர்வு செய்வது என்கிற இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. சுப்புலட்சுமி லுக் டெஸ்ட் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார்.
இதற்கிடையே ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் இந்தப் படம் மூலம் இசையமைப்பாளாராக அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட்டில் இப்படி பிரபல வாரிசுகள் ஒன்றாக இணைந்து படம் எடுப்பது வழக்கம். இப்போது பாலிவிட்டின் கலாசாரம் ஜேசன் சஞ்சய் படம் மூலம் கோலிவுட்டுக்கும் பரவயிருக்கிறது