லைகா நிறுவனம் தயாரிக்க, விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப்படத்துக்கான ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.
நடிகர்களின் தேர்வும் நடந்துவந்த நிலையில் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்கவைக்க விக்ரமின் மகன் துருவ், கவின் எனப்பலரிடமும் பேசப்பட்டு வந்தது. இறுதியில் ‘மாநகரம்’, சமீபத்தில் ‘ராயன்’ படங்களில் நடித்திருந்த சந்தீப் கிஷன் ஹீரோவாக இந்தப்படத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளராக இந்தப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் அமீன் அறிமுகமாகயிருக்கிறார்.
கனடாவில் திரைக்கதை, இயக்கம் படித்துவிட்டு வந்திருக்கும் ஜேசன் சஞ்சய் திரைக்கதையை மிகவும் சிறப்பாக எழுதிமுடித்திருப்பதாகச் சொல்கிறார்கள். படத்துக்கான ஷூட்டிங் அக்டோபரில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது!