மனைவி ஆர்த்தியுடனான விவாகரத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகர் ஜெயம் ரவி. பாடகி கெனிஷாவுடனான தொடர்புதான் இதற்கு காரணம் என செய்திகள் வெளியானதை இருவரும் மறுத்திருந்தனர்.
திருமணம் ஆன முதல் பத்து வருடங்களில் தனது திருமண வாழ்வு நன்றாக சென்று கொண்டிருந்ததாகவும், சமீத்திய மூன்று வருடங்களாகதான் ஆர்த்தி தன் மீது சந்தேகப்படுவதாகவும் சண்டையிடுவதாகவும் சொல்லியிருந்தார் ஜெயம் ரவி. தனக்கென்று தனி வங்கிக் கணக்கு கூட இல்லை என சொன்னவர், வீட்டு வேலைக்காரர்களுக்கு கிடைத்த மரியாதை கூட தனக்கு கிடைக்கவில்லை என்றும் வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில், ஜெயம் ரவி சென்னையில் இருந்து மும்பைக்கு குடியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை விமான நிலையத்தில் ஜெயம் ரவி இருக்கும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. மும்பையில் புது அலுவலகம் ஒன்றை அமைத்திருக்கிறாராம் ஜெயம் ரவி. இதுமட்டுமில்லாமல், பாலிவுட் படங்களில் நடிப்பதற்காக அங்குள்ள சில தயாரிப்பு நிறுவனங்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். விரைவில் பாலிவுட் படங்களிலும் ஜெயம் ரவியை பார்க்கலாம் என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
வீம்புக்கென்றே தன்னை வைத்து படங்கள் தயாரித்த தனது மாமியார் பொய்யாக நஷ்ட கணக்கு காட்டியதாகவும் இனி இனி அடுத்தடுத்த படங்களில் இருந்து தனது சம்பளத்தை அதிகப்படுத்துவேன் எனவும் ஜெயம் ரவி முன்பொரு பேட்டியில் பேசியிருந்தார். இதன் ஒரு பகுதியாகவே பாலிவுட் படங்களில் நடிக்க இருப்பதாகவும் பேசப்படுகிறது.