ஜூனியர் என்டிஆர் நடிப்பில் ‘தேவாரா’ எனும் படம் செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸாகிறது. தமிழிலும் இந்தப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸாகிறது. இதில் ஶ்ரீதேவியின் மூத்தமகளான ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்க, அனிருத் இசையமைத்திருக்கிறார். ஏற்கெனவே பாடல்கள் எல்லாம் இன்ஸ்டாகிராம் ரீல்ஸாக ஹிட் அடிக்க, படத்துக்கான பரபரப்பு எகிறியிருக்கிறது.
இதற்கிடையே சென்னையிலும் படத்துக்கான ப்ரமோஷன் நடந்துவருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெற்றிமாறனோடு ஒரு படம் பண்ணணும் என்றும் தலப்பாகட்டி பிரியாணியை ரொம்பவே மிஸ் பண்றேன் என்றும் பேசி சென்னை மீடியாவை கலகலப்பாக்கினார் ஜூனியர் என்டிஆர். ஶ்ரீதேவி மகள் ஜான்வி சினிமாவுக்கு கிடைத்திருக்கும் பொக்கிஷம் என்றும், மிகச்சிறப்பாக நடிக்கிறார் என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
ஜூனியர் என்டிஆரின் பேச்சை மேற்கண்ட வீடியோவில் காணலாம்!