தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சமீபத்தில் தனது இரண்டாவது திருமணத்தை அறிவித்தார். நடிகை சமந்தாவுடன் நான்கு ஆண்டுகள் மட்டுமே திருமண உறவில் இருந்து பின்னர் விவாகரத்து பெற்ற நாக சைதன்யா, தற்போது மாடலும், நடிகையுமான சோபிதாவை மணக்க உள்ளார்.
சமீபத்தில் நாக சைதன்யா, சோபிதாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். ஆனால், இந்த புகைப்படத்திற்கு எதிர்மறையான கமென்ட்கள் அதிக அளவில் வந்தது.
இதனால் நாக சைதன்யா கமென்ட் செக்ஷனை முடக்கியுள்ளார். இதனால் யாரும் அந்த போட்டோவின் கீழ் கமென்ட் செய்ய முடியாது. நாக சைதன்யாவின் இந்த முடிவு அவரது மனநலனுக்கு நல்லது, சரியான முடிவு என்கிறார்கள் சமூகஊடக ஆர்வலர்கள்.