நாக சைதன்யா - சோபிதா துலிபாலா 
சினிமா

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண நிச்சயதார்த்தம்... இன்று ஐதராபாத்தில் நடைபெறுகிறது!

பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்த பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

Kavitha

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கிசுகிசுவாகவே இருந்த செய்தி இன்று உண்மையாகிறது. தெலுங்கு திரைப்படத் துறையின் பிரபலமான நடிகர்கள் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் இடையே இன்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. திருமண நிச்சயதார்தத்தை ஐதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் இல்லத்தில் நடத்த முடிவு செய்துள்ளனர்.

பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நான்கு ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்த பின்னர், கருத்து வேறுபாடு காரணமாக 2021-ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். 

சோபிதா துலிபாலா

இந்நிலையில் முன்னாள் மாடல் அழகியும் நடிகையுமான சோபிதா துலிபாலாவுடன் நாக சைதன்யா காதலில் இருப்பதாக வதந்திகள் பரவியது. இருவரும் இந்த வதந்திகளை மறுக்காத நிலையில் இரண்டு ஆண்டு ரகசியக் காதல் திருமணத்தில் இணைய இருக்கிறது. சோபிதா துலிபாலா தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

37 வயதான நாக சைதன்யா, 32 வயதான சோபிதா துலிபாலா இருவருக்கும் இன்று திருமண நிச்சயதார்த்தம் நடக்கயிருக்கிறது. இவ்விழா, நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.