நடிகர் நானி- எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியானது ‘சரிபோதா சனிவாராம்’. கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாத கோபக்கார இளைஞனாக நானியும் அதிரடி காவல்துறை அதிகாரியாக எஸ்.ஜே.சூர்யாவும் நடித்திருந்தார்கள். தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான இந்தப் படம் பாக்ஸ் ஆஃபிஸில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை வாரிக் குவித்தது. நானி மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரின் நடிப்பும் கொண்டாடப்பட்டது.
நானிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். ‘கேங் லீடர்’ படத்திற்குப் பின் பிரியங்கா மோகன் நானியுடன் ஜோடி சேரும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியாகி ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்தான அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த மாதம் 26-ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தப் படம் வெளியாக உள்ளது. திரையரங்குகளில் பார்க்கத் தவறிய ரசிகர்களும் மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும் என விரும்புபவர்களும் இந்தப் படத்தை அடுத்த வாரம் ஓடிடியில் பார்த்து மகிழலாம் படக்குழு தெரிவித்துள்ளது.