லாபட்டா லேடீஸ் 
சினிமா

ஆஸ்கர் 2025 : இந்தியாவின் தேர்வாக ‘லாபட்டா லேடீஸ்'... ஆனால், இந்தியாவே கழுவி ஊற்றிய 'அது' எப்படி?

28 படங்கள் லிஸ்ட்டில் தமிழில் இருந்து ‘வாழை’, ‘மகாராஜா’, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா எக்ஸ்எல், ‘தங்கலான்', ‘ஜமா’ என ஆறு படங்கள் இடம்பெற்றிருந்தன. அதேப்போல் மலையாளத்தில் இருந்து ஆடு ஜீவிதம், உள்ளொழுக்கு உள்பட 5 படங்களும் தேர்வுப்பட்டியலில் இருந்தது.

Jeeva

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான பிரிவில் இந்தியா படங்களை அனுப்பிவருகிறது. மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா அமைப்புதான் ஒவ்வொரு ஆண்டும் படங்களைத் தேர்வு செய்கிறது. அந்தவகையில் இந்தாண்டு 28 படங்கள் ஃபைனல் லிஸ்ட்டில் இருந்த நிலையில் கிரண் ராவ் இயக்கத்தில் இந்தியில் வெளியான ‘லாபட்டா லேடீஸ்’ படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

28 படங்கள் லிஸ்ட்டில் தமிழில் இருந்து ‘வாழை’, ‘மகாராஜா’, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா எக்ஸ்எல், ‘தங்கலான்', ‘ஜமா’ என ஆறு படங்கள் இடம்பெற்றிருந்தன. அதேப்போல் மலையாளத்தில் இருந்து ஆடு ஜீவிதம், உள்ளொழுக்கு உள்பட 5 படங்களும் தேர்வுப்பட்டியலில் இருந்தது. 

வாழை

தமிழ் மற்றும் மலையாள படங்கள் சரியாக இருக்கும் நிலையில் இந்தியில்தான் அபத்தங்கள் நடந்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ரன்பீர் கபூர், சன்னி தியோல் நடிப்பில் சந்தீப் ரெட்டி என்பவர் இயக்கிய ‘அனிமல்' படமும் ஆஸ்கருக்கான இந்தியாவின் இறுதிப்பட்டியலில் எப்படி இடம்பிடித்தது என விமர்சனங்கள் எழுந்திருக்கிறது.

பெண்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் படமாக்கப்பட்டிருந்த இந்தப்படம் எப்படி ஆஸ்கருக்கான இந்தியாவின் இறுதிப்பட்டியலில் இடம்பெறலாம் என எதிர்ப்புகள் கிளம்பியிருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியாவும் கழுவி உற்றிய இந்தப்படம் பட்டியலில் இடம்பிடித்திருக்கவே கூடாது என்கிறார்கள் விமர்சகர்கள். அதேப்போல் இந்த 28 படங்கள் கொண்ட பட்டியலில் இந்தியில் வீர் சாவர்கர் படமும் இடம்பெற்றிருந்தது.