பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா ஆகியோர் நடித்திருக்கும் ‘தங்கலான்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இதற்கான கடைசிக்கட்ட செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பார்வதி மனம் திறந்து வெளிப்படையாகப் பேசினார்.
‘’ரஞ்சித் கூட வொர்க் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை இருந்துச்சு. இது இப்போதான் நிறைவேறியிருக்கு. இரஞ்சித் நான் மிகைப்படுத்தி சொல்றேன்னு நினைக்கவேண்டாம். நீங்க ஏற்கெனவே ஜெயிச்சிட்டீங்க. வெற்றி உங்களுடையதுதான். இந்த உலகம் நீங்க உருவாக்குனது.
நடிகர்கள் ஒரு நல்ல கேரெக்டருக்காக காத்திட்டு இருப்பாங்க. அப்படி எனக்கு கிடைச்ச கதாபாத்திரம் கங்கம்மா. இதுதான் என்னுடைய கடைசிப்படமா இருக்கும்னா கங்கம்மாவா நான் ரொம்ப சந்தோஷப்படுறேன். கங்கம்மா என்னை ரொம்பவே மாத்தியிருக்கா. எல்லா பெண்களும் இந்த கதாபாத்திரத்தோட தொடர்புபடுத்திக்கிற மாதிரி இருக்கும். கங்கம்மாவுக்கு நான் நியாயம் செஞ்சிருக்கேன்னு நினைக்கிறேன்.
நடிப்புக்கு அலங்காரம் ரொம்ப முக்கியம். அங்கிருந்துதான் அந்த நாள், அந்த கெரெக்டர் தொடங்குது. இதுக்கு உதவியாக இருந்த காஸ்ட்யூமர் அனிதா(இரஞ்சித் மனைவி)வுக்கு நன்றி. பெண்களுக்கு பாடி இமேஜ் இஷ்யூஸ் நிறையவே இருக்கு. பளவுஸ் இல்லாம நடிக்கிறது சைக்கலாஜிக்கலா பெரிய விஷயமா இருந்துச்சு. ஆனா, அந்த நேரத்துல கான்ஃபிடன்ஸ் கொடுத்த அனிதா அண்ட் டீமுக்கு நன்றி’’ என்று பேசினார் பார்வதி திருவோத்து.
பார்வதியின் முழு பேச்சை இந்த வீடியோவில் காணலாம்!