சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘கூலி' படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதமே தொடங்குவதாக இருந்தது. ஆனால், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும், காஸ்ட்டிங் தேர்வுகளும் இன்னும் முடியாததால் ஜூலை 1-ம் தேதிக்கு ஷூட்டிங் தள்ளிப்போயிருக்கிறது.
ரஜினியும் இமயமலை ஆன்மீகப் பயணம், மோடி, சந்திரபாபு நாயுடு பதவியேற்புவிழா அரசியல் பயணம் முடித்துவிட்டு சினிமா பயணம் மேற்கொள்ளத் தயாராகிவிட்டார். கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள ஸ்டுடியோவில் ‘கூலி' படத்துக்கான செட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது.
இதற்கிடையே ‘கூலி' படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், சத்யராஜ் நடிப்பதாகவும் செய்திகள் பரவுகின்றன. இதுபற்றி படக்குழுவுவில் உள்ளவர்களிடம் விசாரித்தோம். ‘’முக்கியமான காஸ்ட்டிங் எதுவும் ஃபைனல் ஆகல. சிவகார்த்திகேயனை ஒரு பர்த்டே பார்ட்டியில மீட் பண்ணும்போது டைரக்டர் லோகேஷ் கேஷுவலா சிவாகிட்ட ‘கூலி' படத்துல நடிக்கிறீங்களான்னு கேட்டார். அவ்ளோதான்… மத்தபடி எதுவும் நடக்கல. அதேமாதிரி சத்யராஜ் சார் நடிக்கிறதும் கன்ஃபர்ம் ஆகல. காஸ்ட்டிங் கன்ஃபர்ம் ஆக ஜூன் மாசக்கடைசியாகிடும்'’ என்றார்கள்.