நடிகர்கள் அதிதி மற்றும் சித்தார்த்துக்கு இடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தெலங்கானா, ஸ்ரீரங்கபூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ ரங்கநாயக சுவாமி கோயிலில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது.
இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். திருமணப் புகைப்படங்களை பகிர்ந்திருந்த இந்த ஜோடிக்கு ரசிகர்களும் திரையுலகினரும் தங்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் அதிதி பற்றியும் தங்கள் காதல் பற்றியும் பத்திரிகை ஒன்றிற்கு சமீபத்தில் கொடுத்தப் பேட்டியில் பகிர்ந்துள்ளார் சித்தார்த்.
"அதிதியிடம் நான் அதிகம் மன்னிப்புதான் கேட்பேன். அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தப்பு பண்ணுவேன். இதனால, அவர்கிட்ட ஐ லவ் யூ-வை விட அதிகம் சாரிதான் சொல்லியிருக்கேன். குறிப்பா காலையில தூக்கத்தில் இருந்து எழும்புறது ரொம்பவே கஷ்டம். என் விருப்பமே இல்லாமல் அதிதி என்னை எழுப்பி விடுவார். அதில் அவருக்கு ஒரு சந்தோஷம்" எனப் பேசியிருக்கிறார் சித்தார்த்.