கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29-ம் தேதி தொடங்கிய கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அரசுடன் பல தன்னார்வலர்களும் இணைந்துள்ளனர்.
இந்த நிலையில், பெருந்துயரில் பங்கேற்கும் வகையில் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக, நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி ஆகியோர் 50 லட்சம் ரூபாய் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள்.
மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மட்டுமல்லாது நடிகர்கள் விஜய், விக்ரம், ஜிவி பிரகாஷ் ஆகியோரும் வயநாடு நிலச்சரிவிற்காகத் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளனர். இதில் நடிகர் விக்ரம் 20 ரூபாய் லட்சம் நிதி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.