சூர்யா சமீபத்தில் பாலிவுட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளரான அனுபமா சோப்ராவுக்கு பேட்டியளித்திருக்கிறார். அதில் ''நீங்க ஜோதிகாவுக்காகத்தான் மும்பைக்கு மாறிட்டீங்கன்னு சொல்றாங்களே… உண்மையா'' என அனுபமா கேட்க, அதற்கு மனம் திறந்து பதில் அளித்திருக்கிறார் சூர்யா.
சூர்யா சொன்ன பதிலுக்கு சமூக வலைதளங்களில் பேராதரவு கூடிவருகிறது. அனுபமாவின் கேள்விக்கு மிகவும் மனம்திறந்து வெளிப்படையாக உண்மையைப் பேசினார் சூர்யா.
‘’நான் இதைப் பற்றித் திறந்த மனதுடன் பேசலாம்னு நினைக்கிறேன். அவங்க(ஜோதிகா) 18,19 வயதில் சென்னைக்கு வந்துட்டாங்க. அடுத்த 27 வருஷம் முழுக்க சென்னைலதான் இருந்தாங்க. பிறந்து வளர்ந்த, மும்பையில் 18 வருஷம் மட்டும்தான் இருந்தாங்க. அதைவிட அதிகமா கிட்டத்தட்ட 27 வருஷம் சென்னைல இருந்தாங்க. அவங்க என்னோடவும், என் குடும்பத்தோடவும்தான் இருந்தாங்க. அவங்களோட குடும்பத்தையும், வாழ்க்கையையும், career-யும், நண்பர்களையும், பாந்த்ரால விட்டுட்டு சென்னைல இருந்தாங்க.
இப்ப 27 வருஷம் கழிச்சு மும்பைக்கு வந்திருக்காங்க. இப்ப அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. 27 வருடம் கழிச்சு தன் தந்தையோட நேரத்தை செலவழிக்க வந்திருக்காங்க. ஒரு ஆணுக்கு என்னென்ன தேவைகள் இருக்கோ அதே மாதிரி ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கு. நான் புரிஞ்சிக்க ரொம்பக் காலம் எடுத்துக்கிட்டேன். ரொம்பப் பின் தங்கிட்டேன். இப்ப புரிஞ்சிக்கிறேன். அவங்களுக்கும் விடுமுறை வேணும்… நண்பர்கள் வேணும், தனி பொருளாதார சுதந்திரம் வேணும், மதிப்பு வேணும், ஜிம் நேரம் வேணும்.
அவங்க பெற்றோரோட இருக்க விரும்புற நேரத்தை நாம எதுக்கு கெடுக்கணும், அவங்களைப் பிரிக்கணும்… அவங்களுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழலாமே… ‘நான்… நான்… என்னை மட்டும்’ அப்படின்னு தான் இருக்கோம். அது மாதிரி இல்லாம, அவங்களும் வளர்ச்சியடையும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.
என் பசங்களும் IB school-ல படிக்கிறாங்க…. சென்னைல ஒன்றிரண்டு IB school- தான் இருக்கு. மும்பைல நிறைய IB schools இருக்கு. அவங்களுக்கு பிடிச்ச subjects படிக்கிறாங்க. நல்லா படிக்கிறாங்க… நல்லா முன்னேறுவாங்கன்னு நம்பிக்கை இருக்கு. அதனாலதான் மாறினோம்.
நான் சென்னை - மும்பைன்னு ஒரு சமநிலை வச்சிருக்கேன். மாசத்துக்கு குறைஞ்சது 10 நாள் எந்த வேலைக்குமே போகம பாம்பேல இருக்கேன். மத்த 20 நாள்ல ஒரு நாளுக்கு 18-20 மணி நேரம்கூட வேலை பண்றேன். ஆனா அந்த 10 நாள்ல எந்த மீட்டுங்கும், போன் கால்ஸும் இல்லை. மும்பைல ரொம்ப அமைதியா இருக்கேன்.
என் மகளோட ஷாப்பிங் போறேன். குடும்பத்தோட கார்ல டிரைவ் போறேன். அவங்களோட ice cream சாப்பிடப்போறேன்… மகனை பேஸ்கெட் பால் கிளாஸுக்கு கூட்டிப்போறேன்… ரொம்ப சந்தோஷா இருக்கேன்’’ எனப் பேசியிருக்கிறார் சூர்யா.