பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் சல்மான்கானும், தெலுங்கில் நாகர்ஜூனாவும், மலையாளத்தில் மோகன்லாலும் தொகுத்து வழங்கி வருகின்றனர். இதில் தமிழ் பிக்பாஸின் ஏழு சீசன்களை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் படப்பணிகள் காரணமாக விலகிவிட, எட்டாவது சீசனை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழில் எட்டாவது சீசன் ஆரம்பித்தது போலவே, இந்தியிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 18ஆவது சீசன் தொடங்கி இருக்கிறது. இதில் போட்டியாளர்களின் அறிமுகம் இருந்தது. இதில் ’குக்கு வித் கோமாளி’ புகழ் நடிகை ஷ்ருதிகா போட்டியாளராக உள்ளே சென்றிருக்கிறார்.
ஷ்ருதிகா பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி என்பது குரிப்பிடத்தக்கது. நடிகர் சூர்யாவின் ‘ஸ்ரீ’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தார். இந்தப்படம் சுமாராகப் போனாலும் இவரது அடுத்தடுத்து இவர் நடித்த சில படங்கள் தோல்வி அடையவே சினிமாவை விட்டு விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். பின்பு, விஜய் தொலைக்காட்சியின் ‘குக்கு வித் கோமாளி3’ சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி மூலம் கம்பேக் கொடுத்தார். அந்த சீசனில் டைட்டில் வின்னராகவும் புகழ் பெற்றார். இதற்கு முன்பு தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவரது பெயர் அடிபட்டது.
ஆனால், இப்போது இந்தி பிக்பாஸில் நுழைந்திருக்கிறார். அங்கு சென்றும் தனது முதல் படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது என்று போட்டியாளர்களிடம் பேசியிருக்கிறார். மேடையில் சல்மான்கானுடன் இவர் பேசிய விதத்தையும் பார்த்த இந்தி பிக்பாஸ் போட்டியாளர்கள் இணையத்தில், ''ஷ்ருதிகா மிகவும் போலியாக இருக்கிறார். அவர் பேசுவதைப் பார்த்தாலே எரிச்சலாகிறது. இவரை வீட்டைவிட்டு வெளியேற்றுங்கள்’' என்று கமென்ட் அடிக்கின்றனர்.