ட்ரிப்டி டிம்ரி 
சினிமா

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ‘அனிமல்’ நடிகை… யார் இந்த ட்ரிப்டி டிம்ரி?!

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாக இருக்கும் தனுஷ் படத்தில் ‘அனிமல்’ படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான ட்ரிப்டி டிம்ரி நடிக்க இருக்கிறார்.

Lavanmani

தமிழ் படங்களை விட இப்போது ‘PAN Indian’ படங்களில் நடிப்பதுதான் ட்ரெண்ட். அந்தவகையில் நடிகர் தனுஷ் ஏற்கெனவே ‘Raanjhanaa’,  ‘Atrangi Re’ உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நிலையில் தற்போது நாகார்ஜுனாவுடன் இணைந்து ‘குபேரா’ எனும் படத்தில் நடித்துவருகிறார்.

இதற்கு அடுத்து இவரது முந்தைய இந்தி படங்களை இயக்கிய அதே ஆனந்த் எல்.ராய் இயத்தில் ‘தெரே இஸ்க் மெயின்' என்கிற இந்தி படத்தில் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாக இருக்கும் தனுஷ் படத்தில் ‘அனிமல்’ படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமான ட்ரிப்டி டிம்ரி  நடிக்க இருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் வாராணாசியில் தொடங்கயிருக்கிறது.

ட்ரிப்டி டிம்ரி

யார் இந்த ட்ரிப்டி டிம்ரி?

ட்ரிப்டி டிம்ரி முன்னாள் மாடல். சின்ன சின்னதாக இந்திப்படங்களில் தலைகாட்டத்தொடங்கியவர், சாஜித் அலி இயக்கி, இம்தியாஸ் அலி தயாரித்த ‘லைலா மஜ்னு’ படத்தின் மூலம் புகழ்பெற்றார். இந்தப்படத்தில் லைலாவாக நடித்தார் டிமரி. அனுஷ்கா ஷர்மாவின் தயாரிப்பு நிறுவனமான க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் தயாரித்த நெட்ஃபிக்ஸில் வெளியான ‘புல்புல்’ திரைப்படத்திலும் நடித்து நல்ல விமர்சனங்களைப் பெற்றார் டிம்ரி. ‘அனிமல்' அவரை இன்னும் இந்தியா முழுக்க பிரபலமாக்க, இப்போது தனுஷ் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். 30 வயதான ட்ரிப்டி நடிப்புத்திறமையால் பல விருதுகளையும் வென்றிருக்கிறார்!