‘’டீஏஜிங் தொழில்நுட்பம் மூலம் 23 வயசு விஜய்யை கொண்டுவர பிளான் பண்ணோம். விஜய்யும் ‘என்னை மாதிரியே வெச்சிக்கோடா… என்ன மாதிரி இல்லாம போயிடப்போகுதுடா’ன்னு சொன்னார். ஆனா, நாங்க மாத்தும்போது ரசிகர்களுக்கு அது பிடிக்காமப் போச்சு…அப்புறம்தான் பெரிய எக்ஸ்பெரிமென்ட்லாம் பண்ணிடக்கூடாது, விஜய் மாதிரியே இருந்தாப்போதும்னு பிளான் பண்ணி இப்போ ட்ரெய்லர்ல மாத்தியிருக்கிறோம். ட்ரெய்லர் லேட் ஆனதுக்கு அதுவும் ஒரு காரணம்.
அரசியலுக்காக படத்துல ஒரு டயலாக்கும் எழுதல… என்னைக்குமே அரசியல் டயலாக்ஸை விஜய் எழுதச்சொன்னதில்லை’’ என்றார்.
பிரஸ்மீட்டில் ‘’காந்தி என ஹீரோவுக்குப் பெயர்வைத்துவிட்டு அவர் குடிப்பதுபோல காட்டுகிறீர்களே’’ என கேள்வி எழுப்பப்பட, வெங்கட் பிரபு கலாய்க்கும் விதமாக ‘’என்னோட பெஸ்ட் ஃபிரெண்டு பேரு காந்தி… அவன் என்னென்ன பண்றான் தெரியுமா… வெளிலேயே சொல்லமுடியாது'’ என நகைச்சுவையாக பதில் அளித்தார்.
வெங்கட் பிரபு பத்திரிகையாளர் சந்திப்பின் முழு வீடியோவை மேற்கண்ட லிங்க்கில் காணலாம்!