ரஜினிகாந்த், ஃபகத் ஃபாசில், அமிதாப் பச்சன் வேட்டையன்
சினிமா

’வேட்டையன்’ அமிதாப் பச்சன் கதாபாத்திரத்தில் முக்கிய மாற்றம்... ஏன் இந்த அவசர முடிவு?!

‘வேட்டையன்’ படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் முக்கிய மாற்றம் நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Aathira

’ஜெய்பீம்’ ஞானவேல் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நடிகர் அமிதாப்பச்சனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு அமிதாப் மற்றும் ரஜினி இருவரும் சேர்ந்து நடிக்க பல கதைகள் கேட்டு பிடிக்காமல் போனநிலையில், ‘வேட்டையன்’ படத்தின் கதை அமிதாப்புக்கு கேட்டவுடன் பிடித்து விட்டதாக ரஜினிகாந்த் இதன் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்திருந்தார்.

ரஜினிகாந்த், அமிதாப் பச்சன்

’வேட்டையன்’ படத்தின் ப்ரிவியூவும் இசை வெளியீட்டு விழாவுக்கு முன் வெளியானது. இந்த ப்ரிவியூவில் இடம்பெற்றிருக்கும் அமிதாப்பச்சன் கேரெக்டருக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால், பிரகாஷ்ராஜின் குரல் அமிதாப்பச்சனுக்கு பொருந்தவில்லை எனவும், குரல் தனியாகத் தெரிகிறது எனவும் விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, படக்குழு தமிழில் பிரகாஷ்ராஜின் குரலை நீக்கிவிட்டு ஏஐ தொழில்நுட்பம் மூலமாக அமிதாப்பின் குரலையே தமிழுக்கு கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள். இனி அமிதாப்பின் குரலிலேயே 'வேட்டையன்' படத்தைக் காணலாம்!