விக்னேஷ் சிவன் - நயன்தாரா 
சினிமா

நயன்தாராவின் நாயகன், ட்ரெண்டிங் பாடலாசிரியர், மாடர்ன் காதல் இயக்குநர்... HBD விக்னேஷ் சிவன்!

இயக்குநரும், பாடலாசிரியருமான விக்னேஷ் சிவன் தனது திறமையால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளார். தற்போது எல்ஐசி என்ற புதிய படத்தை இயக்கி வரும் விக்னேஷ் சிவனின் 39வது பிறந்தநாள் இன்று. அவரைப்பற்றிய 10 சுவாரஸ்யத் தகவல்கள் இங்கே!

Jeeva


1. சினிமா பயணத்தின் ஆரம்பம் : விக்னேஷ் சிவன் தனது இயக்குனர் பயணத்தை 'போடா போடி' என்ற படத்தின் மூலம் தொடங்கினார். இப்படத்தில் சிம்பு மற்றும் வரலட்சுமி சரத்குமார் நடித்தனர். இப்படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும், விக்னேஷ் சிவனின் பெயரை தமிழ் சினிமா உலகுக்குள் பிரபலமாக்கியது.

2.  தனுஷுக்கு உதவிக்கரம் : ஒளிப்பதிவாளரான வேல்ராஜுக்கு இயக்குநர் அங்கீகாரம் கொடுத்து தனுஷ் நடித்தப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இப்படம் தனுஷ் எதிர்பார்த்த வகையில் வராத நிலையில் விக்னேஷ் சிவனின்  உதவியை நாடினார் தனுஷ். விக்னேஷ் சிவன்தான் சில காட்சிகளை மாற்றி ஸ்கிரிப்ட்டிலும், இயக்கத்திலும் உதவி அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய உதவினார். 

3. தனுஷின் நன்றிக்கடன் : வேலையில்லா பட்டதாரி படத்துக்கு கிரெடிட் இல்லாமல் உதவியதால் தன்னுடைய தயாரிப்பில் தனுஷுக்கு இரண்டாவது படம் இயக்கும் வாய்ப்பை வழங்கினார் தனுஷ். வொண்டர்பார் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடிதான் படம்தான் அவரது வாழ்க்கையையே மாற்றியது. நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இந்தப்படத்தில்தான் முதன்முதலாக சந்தித்துக்கொண்டனர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா

4. நானும் ரௌடிதான் வெற்றி: முதல் படத்திற்குப் பிறகு மூன்று ஆண்டுகள் காத்திருந்த விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

5. நயன்தாராவுடன் காதல் : ‘நானும் ரௌடிதான்’ படத்தின் போது, விக்னேஷ் சிவன் - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் நீடித்த இந்த 2022-ல் திருமணத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது.

6. சப் இன்ஸ்பெக்டரின் மகன் : சப் இன்ஸ்பெக்டரின் மகனான விக்னேஷ் சிவன் ‘போடா போடி' மூலம் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்து ‘நானும் ரெளடிதான்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்' என நான்கு படங்களை இயக்கியிருக்கிறார்.

7. லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : தற்போது விக்னேஷ் சிவன் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி(எல்ஐசி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.

8. டிரெண்டிங் பாடலாசிரியர் : இயக்குனராக மட்டுமல்லாமல், விக்னேஷ் ஒரு திறமையான பாடலாசிரியராகவும் தன்னை நிலைநிறுத்தியிருக்கிறார். அனிருத்துடன் இணைந்து சிறந்த டிரெண்டிங் பாடல்களை எழுதியிருக்கிறார்.

தாயுடன் விக்னேஷ் சிவன்

9. பாசக்காரத் தந்தை: விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இரண்டு குழந்தைகள். உயிர் மற்றும் உலக் - வாடகை தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக்கொண்டனர். 

10. எமோஷனல் பயணம் : விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் 1000 ரூபாயுடன் ஆரம்பித்த பயணம் இன்று குடும்பத்துடன் டிஸ்னிலேண்ட் செல்லும் அளவிற்கு மாறியிருக்கிறது என குறிப்பிட்டு, ரசிகர்களின் மனதில் நெகிழ்வை ஏற்படுத்தியிருந்தார்.