கனமான, அதிக கார்ப் உள்ள உணவுகள் (அரிசி, பரோட்டா, பிரியாணி போன்றவை) உடலை சோர்வாக மாற்றும். இதற்கு பதிலாக புரோட்டீன், ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து உள்ள உணவுகளை உணவில் அதிகம் சேர்க்கவும்.
நீர்ச்சத்து குறைவானால், சோர்வு ஏற்படலாம். தொடர்ந்து ஹைட்ரேஷனை பராமரிக்க, அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
மதிய உணவுக்குப் பிறகு ஒரு சிறிய நடை உங்களைச் சுறுசுறுப்பாகவும், இரத்த ஓட்டத்தைச் சிறப்பாகவும் வைத்து, தூக்கத்தைப் போக்கும்.
சர்க்கரையின் மூலம் உடனடியாக சக்தியைப் பெறலாம், ஆனால் பின்னர் வேகமாக சோர்வாகிவிட வாய்ப்பு அதிகம். அதற்குப் பதிலாக பருப்புகள், பழங்கள் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளை தேர்வு செய்யுங்கள்.
இரவில் 7 முதல் 8 மணி நேரம் சீரான தூக்கத்தைப் பெறுவது, மதியம் தூங்கும் தேவையை குறைக்கும்.
மதிய உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமராமல், சிறு இடைவெளிகளை எடுத்து நிமிர்ந்து, சற்று நடைபயிற்சி செய்வது அவசியம்.
அதிக காபி உங்கள் உடலுக்கு அதிக ஆற்றலைத் தருவது போல இருக்கும். ஆனால் அதன்பிறகு உடலை சோர்வாக்கிவிடும். அதற்கு பதிலாக கிரீன் டீ போன்ற இலகுவான பானங்களை குடிக்கலாம்.
நேராக உட்கார்வது அல்லது நிமிர்ந்து நிற்பது உங்கள் மனதை விழிப்பாக வைத்திருக்கும். உடலில் எனர்ஜி குறையாமல் இருக்க சரியான உட்காரும் நிலையை பின்பற்றுங்கள்.
இயற்கை ஒளி அல்லது பிரகாசமான விளக்குகள் உங்கள் மூளையை விழிப்புடன் வைக்கும். ஒளி அதிகமுள்ள இடங்களில் வேலை செய்யுங்கள்.
ஆழமான மூச்சு பயிற்சிகள் மூளைக்கு அதிக ஆக்சிஜன் கொடுப்பதால் சோர்வு குறையும்.
இந்த எளிய வழிகளைப் பயன்படுத்தி, மதிய உணவுக்குப் பிறகு தூக்கத்தை எளிதில் தவிர்த்து உங்கள் உழைப்புத் திறனை அதிகரிக்கலாம்!