1. உங்கள் நாள் உங்கள் கைகளில்!
தினமும் காலையில் நீங்கள் எந்த நேரத்துக்கு எழுந்தரிக்க வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அதன்படி எழுந்தாலே நீங்கள் காலையை வெற்றிகரமாகத் தொடங்குகிறீர்கள் என அர்த்தம். நேரத்துக்கு எழுந்தவுடன், நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு, உங்கள் உடல் மற்றும் உங்கள் மனதுக்கு நன்றி சொல்லி நாளைத்தொடங்கவேண்டும். நன்றி உணர்வினால் நீங்கள் உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் நேர்மையுடன் செயல்படுத்த முடியும்.
2. நம்மை நாம் நம்புவோம்!
உங்கள் திறமைகளை நம்புங்கள். உங்கள் உழைப்பில் நம்பிக்கை வையுங்கள். உங்கள் வெற்றிக்கு முன்னே செல்ல என்ன தேவையோ அதை நோக்கி கவனம் செலுத்துங்கள். உங்கள் திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் மனம் நினைத்தால் அந்த காரியம் நிச்சயம் முடியும் என நம்புங்க>
3. ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்!
வெற்றிக்கு திட்டமிடுவது அவசியம். உங்கள் இலக்குகளை தினமும் எழுதிப்பாருங்கள். இப்போது உங்கள் இலக்கு எந்த இடத்தில் இருக்கிறது, அவற்றை அடைவதற்கான நடைமுறைகள் என்ன என திட்டமிடுங்கள். தெளிவான இலக்குகள் வழிகாட்டியாக இருக்கும். அவற்றை அடைய உங்கள் முயற்சிகள் கைகொடுக்கும்.
4. இடையூறுகளை கடந்து செல்லுங்கள்!
வாழ்க்கையில் எதிர்மறை அனுபவங்கள் இருக்கும். ஆனால் அவற்றை வென்று முன்னேறுவதே மிகப் பெரிய வெற்றி. கடுமையான சமயங்களில், நீங்கள் தான் உங்களுக்கு போர் வீரன். தன்னம்பிக்கையோடு இடையூறுகளை கடந்து செல்லுங்கள். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும்போது அவற்றை வெளியில் தூக்கி விடுங்கள்.
5. எப்போதும் கற்றுக் கொள்ளுங்கள்!
வெற்றியை அடைய கற்றலோடு வளருங்கள். தினமும் நீங்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெல்ல புதியன புகுதலும், பழையன கழிதலும் அவசியம்.
6. மனதை தீட்டுங்கள்!
உங்களின் மனநிலையை முறையாக வைத்துக் கொள்ள, உடலை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். மனம், உடல் இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்து செயல்படுகிறது. நீங்கள் ஆரோக்கியமான மனோநிலையுடன் இருந்தால்தான் வெற்றி கிட்டும்.
இவற்றை தினமும் நம் மனதில் விதைத்து, நடைமுறைப்படுத்தினால், நம் வாழ்வு நிச்சயம் மாற்றம் அடையும்.