மாயாவதி, திருமாவளவன் 
செய்திகள்

Armstrong:ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், 8 மணி நேர ஊர்வலம், காத்திருந்த தலைவர்கள்... நள்ளிரவில் அடக்கம்!

படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் மாநிலத்தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் கிட்டத்தட்ட 8 மணி நேர ஊர்வலத்துக்குப்பின் திருவள்ளூரில் உள்ள பொத்தூர் எனும் இடத்தில் புத்த மத வழிபாட்டின்படி அடக்கம் செய்யப்பட்டது!

News Tremor Desk

நேற்று மாலை 4.30 மணியளவில் பெரம்பூரில் இருந்து புறபட்ட ஆர்ம்ஸ்ட்ராங்கின் இறுதி ஊர்வலம் பொத்தூர் வந்து சேர நள்ளிரவு 1 மணியானது. பைக்கிலும், காரிலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பொத்தூர் வந்துகுவிய அங்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் செல்வப்பெருந்தகை, புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, திமுக முன்னாள் எம்எல்ஏ ப.ரங்கநாதன் ஆகியோர் காத்திருந்தனர். 

கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தனர். ‘ஜெய்பீம்’ முழுக்கம் இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருந்தது. 

ஆர்ம்ஸ்ட்ராங்

ஆர்ம்ஸ்ட்ராங்கின் உடல் சந்தனப்பேழையில் வைக்கப்பட்டு, புத்தமத வழிபாட்டின்படி புதைக்கப்பட்டது. ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, புதைப்பதற்கு முன்பாக அவரது முகத்தை இறுதியாகப் பார்த்து கதறியழதது அங்கே இருந்த எல்லோரையும் கலங்கடித்தது.