விஸ்வகர்மாவாக நரேந்திர மோடி! NDTV
செய்திகள்

மோடியை கடவுளாக மாற்றி பூஜை!

இது கடவுளை அவமதிப்பது இல்லையா? என்று நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

MARIA

பீகாரில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை கடவுளின் புகைப்படமாக மாற்றி அதற்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட பூஜைகளை செய்து பாஜக ஆதரவாளர்கள் கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். விஸ்வகர்மா பூஜையும் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள வேதப் பள்ளியில் பாஜக-வினர் பிரதமர் நரேந்திர மோடியை விஸ்வகர்மாவாக சித்தரித்துச் சிறப்பு பூஜைகளை செய்துள்ளனர். விஸ்வகர்மாவாகச் சித்தரிக்கப்பட்ட மோடியின் படத்திற்குப் பால் அபிஷேகம் செய்தனர். தீப ஆராதனை காட்டி மோடியின் படத்திற்கு திலகமிட்டு வழிபாடு செய்துள்ளனர். "நவீன இந்தியாவின் விஸ்வகர்மாவாக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். உலகம் முழுக்க இந்தியாவின் பெயரை அவர் உயர்த்தியுள்ளார். அதனால் அவரை விஸ்வகர்மாவாக சித்தரித்து வழிபாடு செய்தோம்" என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்து கடவுளை, இந்து நம்பிக்கையைக் காப்பாற்ற நாங்கள்தான் உள்ளோம் என்று பாஜக-வினர் கூறி வருகின்றனர். அவர்களே இந்து கடவுளின் படத்தை மாற்றியிருப்பதை "இது விஸ்வகர்மாவுக்கு அவமானம். எந்த குடிமகனும் இப்படி செய்ய உரிமையில்லை. இது கடவுளை அவமதிப்பது இல்லையா?" என்றும் "நாட்டில் உள்ளவர்கள் இதை செய்யத் தொடங்கும் போது, ​​இந்த நாடு கண்டிப்பாக நாசமாகிவிடும். இது நாட்டுக்கு துரதிஷ்டம்" என்றும் நெட்டிசன்கள் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்!