இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிரபுரம் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 14 முதல் 18 வரை அதிக பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
வங்காள விரிகுடாவில் உருவாகும் தாழ்வு மண்டலம் பெருமளவில் மேகங்களை உருவாக்கி, குறிப்பாக அக்டோபர் 16-ம் தேதியன்று கடல் பகுதியை கடக்கும்போது கடுமையான மழையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று 20 சென்ட்டிமீட்டருக்கும் மேல் மழை பெய்யலாம் என்பதால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்செரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மழை கடந்த ஆண்டு பெய்த மிச்சாங் (Michaung) புயலைப் போல ஒரு நாள் மழை அல்ல. அதனால் ஒரே நாளில் அதிக கனமழை பெய்து வெள்ளம் ஏற்படாது. ஆனால் 10 சென்ட்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தால் சென்னையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும். அக்டோபர் 16-ம் தேதி 20 சென்ட்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் கவனத்துடனும், முன்னெச்சரிக்கையுடனும் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து அரசு தரப்பில் அவசர சேவைகள் தயார் நிலையில் உள்ளன. மக்கள் இந்த சூழலில் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, வானிலை முன்னறிவிப்புகளைப் பற்றி தொடர்ந்து அறிந்துகொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னைவாசிகள் பல முறை கடும் மழையை எதிர்கொண்டிருந்தாலும், இந்த முறை பல நாட்களுக்கு நீடித்த மழை எதிர்பார்க்கப்படுவதால், முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது!