விமானத்தை விட வேகமான மாக்லே ரயிலை சீனா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. Twitter
செய்திகள்

இந்த அதிவேக ரயிலில் சென்னை டு கோவா ஒரு மணி நேரத்தில் சென்றுவிட முடியும்... எப்படி?

ஒரு மணி நேரத்திற்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக மாக்லேவ் ரயில், பாரம்பரிய தடைகளை உடைத்து, தண்டவாளத்திற்கு மேலே செல்கிறது. இதற்கு `அதிவேக பறக்கும் ரயில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

Aathini

அதிவேக ரயில்களுக்கு பேர்போன சீனா, சமீபத்தில் அதிவேக மாக்லேவ்  (maglev) ரயிலின் வெற்றிகரமான சோதனை ஓட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது.  இது மணிக்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது. ஷாங்க்சி மாகாணத்தில் இந்த சுவாரஸ்யமான சோதனை ஓட்டம் நடந்தது.

ஒரு மணி நேரத்திற்கு 1,000 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக மாக்லேவ் ரயில், பாரம்பரிய தடைகளை உடைத்து, தண்டவாளத்திற்கு மேலே செல்கிறது. `அதிவேக பறக்கும் ரயில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  

சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் உருவாக்கப்பட்ட இந்த மாக்லெவ் ரயில் காந்த லெவிடேஷன் தொழில்நுட்பத்தின் (magnetic levitation train  - maglev) மூலம் இயங்குகிறது.

சீனா மணிக்கு 1,000 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ஒரு அல்டிரா அதிவேக ரயிலை வேக்யூம் குழாயில் சோதனை செய்தது

மாக்லேவ் ரயில் அசாதாரண வேகத்தில் இயங்குவது எப்படி? 

மாக்லேவ் ரயில் பாரம்பரிய ரயில்களைப் போன்ற சக்கரங்கள், அச்சுகள் அல்லது தாங்கு உருளைகளைப் (bearings) பயன்படுத்துவதில்லை, அதற்குப் பதிலாக, இது பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட குழாய் போன்ற அமைப்பு கொண்ட டிராக்குகளில் இயங்குகின்றன. 

குறைந்த அழுத்தம் கொண்ட வாக்யூம் குழாயில் (Vacuum Tube) போக்குவரத்து அமைப்பது என்ற கருத்தை 2013 ஆம் ஆண்டில் எலோன் மஸ்க் முன்மொழிந்தார், அவர் அதை `ஹைப்பர்லூப்’ (Hyperloop) என்று அழைத்தார், ஆனால் அவரது ஹைப்பர்லூப் ஒன் நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் மூடப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டது. 

சமீபத்தில், சீனா தனது Maglev ரயிலை சோதனைக்கு உட்படுத்தியது, குறைந்த அழுத்த நிலையிலான  இரண்டு கிமீ நீளமுள்ள வாக்யூம் (vacuum tube) குழாயில் வெற்றிகரமாக ரயிலை இயக்கியது. இந்த சூப்பர் கண்டக்டிங் மாக்லெவ் ரயில், சோதனை ஓட்டத்தில் வெற்றி அடைந்து, எதிர்காலத்திற்கான ஒரு பெரும் முன்னேற்றத்தை காட்டுகிறது. 

அதிவேக பறக்கும் ரயில்

இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இது பாதுகாப்பு காரணங்களுக்காக தற்போது மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

இதுபோன்ற அதிவேக ரயில்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது அவ்வளவு சுலபமானது அல்ல, ஏனெனில் இந்த ரயில்களுக்கு அசாதாரண வேகம் மற்றும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய முற்றிலும் புதிய ரயில் பாதைகள் தேவைப்படுகின்றன.

மேலும், ரயில் தண்டவாளங்களைக் கடப்பதன் மூலம் விதிகளை மீறும் நபர்களும், தண்டவாளத்தை கடக்கும் அப்பாவி விலங்குகளும் இதுபோன்ற அதிவேக ரயில்களை தற்போது இந்தியாவில் இயக்க முடியாததற்கு முக்கிய காரணிகள் ஆகும். ஆனால் இந்த ஹைப்பர் ரயில்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டால், அவை பயணிகளின் பயண அனுபவத்தை முற்றிலும் மாற்றியமைத்து, பயண நேரத்தை வெகுவாக குறைக்கும். 

சீனா மணிக்கு 1,000 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்ட ஒரு அல்டிரா அதிவேக ரயிலை வேக்யூம் குழாயில் சோதனை செய்தது

இந்த அதிவேக ரயில்கள் மூலம், டெல்லியில் இருந்து பாட்னா வரையிலான பயணத்தை ஒரு மணி நேரத்தில் அடைய முடியும். சென்னையில் இருந்து கோவாவுக்கு 1 மணி நேரத்துக்குள்ளாக செல்ல முடியும். 

தற்போது வரை உலகின் அதிவேக ரயில் என்று அழைக்கப்படும்  ஷாங்காய் மாக்லேவும் சீனாவை அடிப்படையாக கொண்டது தான். இந்த அதிவேக ரயில் ஷாங்காய் புடாங் விமான நிலையத்திற்கும் லாங்யாங் நிலையத்திற்கும் இடையில் பயணிகளை விரைவாகச் சென்று சேர்க்கிறது, மணிக்கு 460 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஆற்றல் கொண்டது.