கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பரவலாக அரசியல் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் அரங்கேறிய பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மதுரையை சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி என தமிழகத்தில் அடுத்தடுத்து படுகொலைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் தொடரும் கொலை சம்பவங்களுக்கு, எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனத்தை தெரவித்துள்ளார். அதில் அவர், தமிழகத்தில் அதிகரித்து வரும் படுகொலை சம்பவங்களுக்கு நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாகவும், கடந்த 200 நாட்களாக தமிழகமே கொலைக்களமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 200 நாட்களில் சென்னை மாநகரில் மட்டும் 86 கொலைச் சம்பவங்கள் அரங்கேறி முதலாவது இடத்தை பிடித்துள்ளது. மதுரையில் 40 கொலைச் சம்பவங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 35-ம், விருதுநகரில் 31 கொலைகளும் அரங்கேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொலை சம்பவங்கள் கட்டுப்பாடின்றி நடந்து வருவது திமுக அரசின் மெத்தன போக்கையும் கையாலாகாத தனத்தையும் காட்டுகிறது எனக்குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.