எழுதிவைக்காத இந்த பேட்டியில் நிச்சயம் என்டர்டெயின்மென்ட் உறுதி என குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
''எக்ஸ் தளத்தில் பெரிய DDOS தாக்குதல் இருப்பதாகத் தெரிகிறது. அதை சரிசெய்யும் வேலைகள் நடக்கிறது. குறைந்த எண்ணிக்கையிலான நபர்களோடு நேரலையை தொடர்வோம், பின்னர் உரையாடலை இங்கே பதிவுசெய்கிறோம்'' என எலான் மஸ்க் பதிவு செய்துள்ளார்.
எலான் மஸ்க் - டொனால்ட் டிரம்ப் எக்ஸ் ஸ்பேசஸ் தளத்தில் பேட்டி லைவ்வாக நடைபெற இருந்தது. இந்த பேட்டிக்கு உலகம் முழுக்க பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பெருமளவில் யாரும் இணைய முடியவில்லை!
பேட்டிக்கு முன்னதாக 80 லட்சம் பேரோடு இணைந்து எக்ஸ் ஸ்பேசஸ் தளத்தில் டெஸ்ட் செய்துபார்த்தோம். ஆனால், இப்படி ஒரு தொழில்நுட்ப சிக்கல் உருவாகியிருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார் எலான் மஸ்க்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிரம்ப் - மஸ்க் ஸ்பேசஸ் உரையாடலில் இணையமுடியாத சூழல் உருவாகியிருக்கிறது. இதற்கிடையே எலான் மஸ்க் இன்னும் அரை மணி நேரத்தில் சிறிய அளவிலான நபர்களுடன் உரையாடல் தொடங்கும் என்றும், பின்னர் எடிட் செய்யப்படாத ஆடியோ வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப சிக்கல் சரிசெய்யப்பட்டு வருவதால் தற்போது ஸ்பேசஸ் உரையாடலில் பலராலும் இணையமுடிகிறது. விரைவில் பேட்டி தொடங்கும் என எதிர்பார்ப்பு!
டிரம்ப் - எலான் மஸ்க் உரையாடலைக் கேட்பதற்காக எக்ஸ் ஸ்பேசஸ் தளத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் உலகம் முழுவதும் இருந்து இணைந்திருக்கிறார்கள்!
முதலில் நடப்பது உண்மையா என்கிற யோசனைதான் எனக்கு வந்தது. புல்லட் சரியாக என் காதுக்கு வந்தது… புல்லட்ஸ், புல்லட்ஸ் என கத்தினேன்… எல்லோரையும் குனியவேண்டும் கத்தினேன். நடந்தது ஒரு அதிசயம். கடவுள் என்னைக் காப்பாற்றினார்.
நான் கீழே குனிந்ததும்… எல்லோரும் குனிந்தனர். யாருமே பயந்து ஓடவில்லை… ஓடியிருந்தால் நெரிசலால் உயிழப்புகள் நிகழ்ந்திருக்கும்.
என்னை சூழ்ந்த சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட்டுகளிடம் ஐ வான்ட்டு கெட் அப்… ஐ வான்ட் டு ஸ்டாண்ட் அப் எனச்சொன்னேன்… மக்களுக்கு நான் நலமாக இருக்கவேண்டும் என்பதை சொல்லவிரும்பினேன். ஏனென்றால் எல்லோருக்கும் நான் உயிரோடு இருக்கிறானா, எனக்கு என்ன ஆனது என்கிற கேள்வி எழுந்தது. என்னை சூழ்ந்திருந்த சீக்ரெட் சர்வீஸ் ஏஜென்ட்டுகளிடம் நான் காதில்தான் சுடப்பட்டிருக்கிறேன். நான் எழுந்திருக்கவேண்டும் என்று சொன்னேன். நான் எழுந்ததும் மக்கள் சந்தோஷமாகி கத்த தொடங்கினார்கள்.