காங்கிரஸ் ஹரியானா 
செய்திகள்

ஹரியானாவில் இன்று சட்டமன்றத் தேர்தல்… காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா?!

டெல்லியின் அண்டை மாநிலமான ஹரியானாவில் 90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த 90 தொகுதிகளுக்கும் ஒரே நாள் வாக்குப்பதிவாக இன்று தேர்தல் நடைபெறுகிறது.

Prakasam

ஹரியானாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்றுவருகிறது. நயாப் சிங் சைனி முதலமைச்சராக உள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம்தான் இவர் ஹரியானாவின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். இதற்கு முன்புவரை மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகப் பதவி வகித்துவந்தார். ஹரியானாவில் பாஜக ஆட்சியை வீழ்த்திவிட்டு மீண்டும் ஆட்சிக்கு வர காங்கிரஸ் பெரிய அளவில் பிரசாரம் செய்திருக்கிறது. முன்னாள் முதலமைச்சரான காங்கிரஸின் பூபேந்தர் சிங் ஹூடா பாஜகவுக்கு எதிரான எதிர்ப்பு அலை வீசுவதால் மீண்டும் முதலமைச்சர் ஆகக்கூடும் என்கிற எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.  

இன்று நடைபெற இருக்கும் தேர்தலில் மொத்தம் 1031 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸின் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார். 

ஹரியானா தேர்தல்

2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இன்று ஹரியானாவின் அடுத்த 5 ஆண்டுகளைத் தீர்மானிக்க இருக்கின்றனர். இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற இருக்கிறது. அக்டோபர் 8-ம் தேதி ஜம்மு காஷ்மீரோடு இணைத்து ஹரியானா மாநில சட்டப்பேரவை முடிவுகளும் வெளியாக இருக்கிறது.