புதிய குற்றவியல் சட்டம் 
செய்திகள்

இனி கல்யாணம் பண்றேன்னு சொல்லிட்டு எஸ்கேப் ஆகமுடியாது... புதிய குற்றவியல் சட்டம் என்ன சொல்கிறது?!

சினிமாக்கள் மூலம் நமக்கு அதிகம் பரிட்சயப்பட்ட வார்த்தை ஐபிசி செக்‌ஷன் 420… ஆனால், இனிமேல் ஐபிசி அதாவது இந்திய தண்டனை சட்டமே இல்லை. அதற்கு பதிலாக மூன்று புதிய சட்டங்களை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசு.

Jeeva

புதிய சட்ட மசோதாக்கள் மோடி 2.0 ஆட்சியின்போது எதிர்கட்சிகள் யாரும் இல்லாமல், விவாதமே இன்றி நிறைவேற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய குற்றவியல் சட்டம் குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய 10 அம்சங்கள் இங்கே!

சமஸ்கிருத பெயரில் சட்டங்கள்!

சமஸ்கிருத பெயரில் சட்டங்கள்!

பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் என சமஸ்கிருத மொழியில் பெயரிடப்பட்டிருக்கும் இந்த சட்டங்கள் முறையே பிரிட்டிஷ் ஆட்சியின்போது இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை முறையே மாற்றம் செய்கிறது.

நவீனமயமாக்கப்படும் நீதி?

நவீனமயமாக்கப்படும் நீதி?

புதிய சட்டங்கள் மூலம் நீதி விரைவாகக் கிடைக்கும் என்கிறது மத்திய அரசு. விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. விசாரணை முடிந்த 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும் என்பது இந்த சட்டத்தின் முக்கிய அம்சம்.

ஜீரோ எஃப்ஐஆர் மற்றும் ஆன்லைன் புகார்!

ஜீரோ எஃப்ஐஆர் மற்றும் ஆன்லைன் புகார்!

புதிய சட்டங்களின்படி குற்றம் நடந்த எல்லைக்குள் இருக்கும் காவல்துறை மட்டுமே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. எந்தவொரு காவல் நிலையத்திலும் எஃப்ஐஆர் பதிவு செய்யமுடியும். இதற்கு ஜீரோ எஃப்ஐஆர் எனப்பெயர். புகார்களை போலீஸுக்கு ஆன்லைனிலும் பதிவு செய்யலாம். விசாரணை சம்மன்களை இ-மெயில் மூலம் அனுப்பலாம்.

 வீடியோ கட்டாயம்!

வீடியோ கட்டாயம்!

அனைத்து கொடூரமான குற்றங்களுக்கும் குற்றம் நடந்த இடத்தை கட்டாயம் வீடியோ பதிவு செய்யவேண்டும். குற்றம் புரிந்தவர்கள் குற்றம் நடந்த இடத்தில் இருந்தபடி குற்றக் காட்சியை விவரிக்க அதை வீடியோ பதிவு செய்யவேண்டும். 

தடயவியல் நிபுணர்!

தடயவியல் நிபுணர்!

வழக்குகள் மற்றும் விசாரணைகளை வலுப்படுத்த, தடயவியல் நிபுணர்கள் குற்றக் காட்சிகளை பார்வையிட்டு ஆதாரங்களை சேகரிக்க வேண்டும்.

பெண் மாஜிஸ்திரேட்!

பெண் மாஜிஸ்திரேட்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு பெண் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும். பெண் மேஜிஸ்திரேட் இல்லையென்றால் ஆண் மாஜிஸ்திரேட் பதிவு செய்யலாம். ஆனால், அது ஒரு பெண் அதிகாரியின் முன்னிலையில் பதிவு செய்யப்பட வேண்டும்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம்!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து மருத்துவமனைகளிலும் இலவச முதலுதவி அல்லது மருத்துவ சிகிச்சை பெறலாம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களின் விசாரணைகளின் முதல் அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். 90 நாட்களுக்கு ஒருமுறை வழக்கின்  முன்னேற்றம் குறித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து தகவல் தெரிவிக்கவேண்டும்.

பாதிக்கப்பட்டவருக்கான உரிமை!

பாதிக்கப்பட்டவருக்கான உரிமை!

புதிய சட்டத்தின்படி யாராவது கைது செய்யப்பட்டால், அவர்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு நபருக்கு அவர்களின் நிலவரம் குறித்து உடனே தகவல் தெரிவிக்கும் உரிமை உண்டு. புதிய சட்டப்படி விசாரணைகளில் தேவையற்ற தாமதங்களைத் தடுக்கவும், சரியான நேரத்தில் நீதியை உறுதிப்படுத்தவும் அதிகபட்சம் இரண்டு ஒத்திவைப்புகளை நீதிமன்றங்கள் அனுமதிக்கும்.

ஆவணங்களின் நகல்கள்!

ஆவணங்களின் நகல்கள்!

பாதிக்கப்பட்டவர்கள் எஃப்.ஐ.ஆரின் நகலைப் பெறமுடியும். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் பாதிக்கப்பட்ட இருவரும் 14 நாட்களுக்குள் எப்ஐஆர், போலீஸ் அறிக்கை, குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்கள் மற்றும் பிற ஆவணங்களின் நகல்களைப் பெற உரிமை உண்டு.

 பாலியல் வழக்குகள்!

பாலியல் வழக்குகள்!

கூட்டு பலாத்காரம், பாலியல் கொலைகள் மற்றும் திருமணம் செய்வதாக பொய்யான வாக்குறுதி தந்து பெண்களை ஏமாற்றுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். திருமண மோசடிகளுக்கு ஐந்து ஆண்டுவரை கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.