ஈரான் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடும் இஸ்ரேல் ராணுவம் 
செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்… வெற்றிகரமாக முறியடித்துவருவதாக ஈரான் ராணுவம் அறிவிப்பு!

கடந்த மாதம் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலாக, இஸ்ரேல் பாதுகாப்பு படை தற்போது துல்லியமான தாக்குதல்களை ஈரானின் முக்கிய ராணுவ தளங்களின் மீது நடத்திவருவதாக அறிவித்துள்ளது.

Jeeva

மத்திய கிழக்கு ஆசியாவில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்துவருகிறது. கடந்த மாதம் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய நிலையில் அதற்குபதிலடியாக நேற்று இரவு இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளது. 

‘’கடந்த சில மாதங்களாக இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வரும் ஈரான் அரசின் நடவடிக்கைகளுக்கு பதிலளிக்க, இப்போது இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈரானின் ராணுவ இலக்குகளை துல்லியமாக தாக்கிவருகிறது.

அக்டோபர் 7-ம் தேதிமுதல், ஈரான் அரசு மற்றும் அதன் பகுதியிலுள்ள கூட்டணி அமைப்புகள் நேரடியாக ஈரான் மண்ணிலிருந்தே இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன.

உலகில் உள்ள அனைத்து நாடுகளைப்போலவே, இஸ்ரேலும் தன்னைப் பாதுகாக்கும் உரிமையும் கடமையும் கொண்டுள்ளது. இஸ்ரேல் அதன் மக்களை பாதுகாக்க எதை வேண்டுமானாலும் செய்யும்'’ என இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டிருக்கிறது.

இந்த தாக்குதல்களின் தாக்கம் மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கும் போர் பதற்ற சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது. ஆழமான அரசியல், மதம் மற்றும் நிலவாத விவகாரங்கள் கொண்டு தொடர்ந்து எழுந்து வரும் இஸ்ரேல்-ஈரான் மோதல் பொதுமக்களையும் அச்சத்தில் வைத்திருக்கிறது.

ஈரான் ராணுவம் வெற்றிகரமாக இஸ்ரேலின் ஏவுகணைத் தாக்குதலை முறியடித்திருப்பதாகவும், தனது நிலப்பரப்பைத் தக்கவைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக, ஈரான் தனது ராணுவத் திறனை முழுமையாக பயன்படுத்தி எதிரி நாட்டு தாக்குதல்களை நேரடியாக எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வளர்ந்து வரும் இஸ்ரேல்-ஈரான் மோதல், மத்திய கிழக்கு அரசியல் மற்றும் பாதுகாப்புத் திட்டங்களில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில், இரு தரப்பும் வன்முறையை கட்டுப்படுத்தி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வை அடைவது மிகவும் அவசியமானதாகும் என பல அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.