யாஹ்யா சின்வார்  
செய்திகள்

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை… யார் இவர், இவரது மரணம் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?!

தெற்கு காசாவில் அமைந்துள்ள ராஃபா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் குறிவைத்து நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டார் என இஸ்ரேல் ராணுவம் (IDF) அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 17-ம் தேதி நடைபெற்ற இத்தாக்குதலில் சின்வார் உட்பட மூன்று ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

Prakasam

யார் இந்த யாஹ்யா சின்வார்?!

யாஹ்யா சின்வார் 1962-ல் கான் யூனிஸ் அகதிகள் முகாமில் பிறந்தவர். 1980-களில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டதால் சின்வார் பலமுறை கைது செய்யப்பட்டார். ஹமாஸின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு 'அல் மஜ்த்'-ஐ உருவாக்கியவர் சின்வார். 1988-ல் சின்வார் 12 பாலஸ்தீனர்களை (இஸ்ரேலுக்காக வேலைபார்த்தவர்கள்) கொன்றதற்காகவும், இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களை கடத்த திட்டமிட்டதற்காக கைதானார். 2011-ல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட இவர், ஹமாஸின் தலைவராக உயர்ந்தார்.

அக்டோபர் 7 இஸ்ரேல் மீது தாக்குதல்!

இஸ்ரேலில் 2023, அக்டோபர் 7-ம் தேதி நடைபெற்ற ஹமாஸின் தாக்குதலின் ஒருங்கிணைப்பாளர் என்று சின்வார் சொல்லப்படுகிறது. இந்த தாக்குதலில் 1,200 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 150 பேர் கடத்தப்பட்டனர். இதன்பின்னர்தான் இஸ்ரேல் முழுவீச்சில் பாலஸ்தீனத்தில் போர் தொடுத்தது!

சின்வாரின் மரணம்!

சின்வாரின் மரணம் ஹமாஸ் இயக்கத்திற்கு பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் இஸ்ரேல் தங்கள் நீண்டகால குறிக்கோளாக சொல்லும் ‘ஹமாஸ் அழித்தொழிப்பு’ நிறைவேறியதாக சொல்லப்படுகிறது!