சென்னை உயர்நீதிமன்றம் 
செய்திகள்

சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வேலை வாய்ப்பு... 8-ம் வகுப்பு படித்திருந்தாலே போதும்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியித்தை நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Puviyarasan Perumal

சென்னை உயர்நீதிமன்றம் வளாகத்தில் உள்ள சட்ட அலுவலர்கள் கட்டடத்தின் 3வது தளத்தில் அமைந்துள்ள அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. இப்பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. இப்பணிக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம் அல்லாதவர்) மற்றும் (முன்னுரிமை அல்லாதவர்) விண்ணப்பிக்கலாம்.

01.07.2024 அன்றுள்ளவாறு 18 வயது முதல் 34 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இப்பணிக்கான சம்பள விகிதம் ஊதிய நிலை -1. ரூ. 15.700/- ஆகும். இதற்கான விண்ணப்பத்தினை, "அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகம் சட்ட அலுவலகர்கள் கட்டிடம் (3 வது தளம்), சென்னை 600 104 என்ற முகவரிக்கு 25.10. 2024 மாலை 5.45 மணிக்குள் வந்தடையும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப உறையின் மேல் "அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம்" என்று எழுதப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை மாவட்டத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் விண்ணப்பதாரரின் புகைப்படம். கல்வித்தகுதிச் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும். விண்ணப்ப உறையினுள் முகவரியுடன் கூடிய ஒரு Self envelope cover affixed with Rs. 50/- Postal Stamp” - வைத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.