Muhammad Yunus  Twitter / Dominique V. Dauster
செய்திகள்

வங்கதேசத்தின் தலையெழுத்தை மாற்றப்போகும் முகமது யூனுஸ் - இந்தியாவை விமர்சித்ததன் பின்னணி

வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்ற ஹசீனா மாணவர் சக்தியை குறைத்து எடை போட்டதே அவரின் வீழ்ச்சிக்கு காரணம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். தற்போது அவருக்கு மாற்றாக ஒரு சிறந்த தலைவரைத் தேர்ந்தெடுத்து விட்டதாக மாணவர் பிரதிகள் அறிவித்துள்ளனர்.

Aathini

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும், வேறு யாரை நியமித்தாலும் அதனை நாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் மாணவர் பிரதிநிதிகள் தீர்க்கமாக தெரிவித்தனர். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக யூனுஸ் நியமிக்கப்பட்டார்.

யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் 16 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். முகமது யூனுஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


வங்கதேசத்தின் இரும்பு பெண்மணி, உலகின் சக்தி வாய்ந்த அரசியல் பெண் தலைவர்களில் ஒருவர், வங்கதேசத்தை வறுமையில் இருந்து மீட்டவர் இப்படி பலவாறாக புகழப்பட்ட ஷேக் ஹசீனா சொந்த நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துவிட்டார்.  

வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்ற ஹசீனா மாணவர் சக்தியை குறைத்து எடைப் போட்டதே அவரின் வீழ்ச்சிக்கு காரணம் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள். தற்போது அவருக்கு மாற்றாக ஒரு சிறந்த தலைவரைத் தேர்ந்தெடுத்து விட்டதாக மாணவர் பிரதிகள் அறிவித்துள்ளனர்.  வங்கதேசத்தில் அசைக்க முடியாத ஆளுமையை மாணவர் சக்தி அசைத்துவிட்டது.

ஆகஸ்ட் 5-ம் தேதி ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறி இந்தியா வந்தடைந்தார். அவரின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஏறக்குறைய 17 கோடி மக்கள் தொகை கொண்ட வங்கதேசத்தில், புதிய ஆட்சி அமைக்க, நாடாளுமன்றத்தை கலைத்து அறிவிப்பை வெளியிட்டார் குடியரசுத் தலைவர். 

அதன் பின்னர் நாட்டின் ராணுவ தளபதி வாக்கர்-உஸ்-ஜமான் இடைக்கால அரசை அமைத்தார். ஆனால் மாணவர்கள் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

School and college students are also chanting slogans in the ongoing anti-quota protest in Dhaka.

58 வயதான ஜமான் ராணுவத் தளபதியாக, ஜூன் 23 அன்று பொறுப்பேற்றார். தற்போதைய சூழலை கட்டுக்குள் கொண்டுவர ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்த அவர்,  வங்கதேசத்தின் அரசு நிர்வாகத்தை எடுத்துக் கொண்டு இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக அறிவித்தார். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு குடியரசுத் தலைவருடன் ஆலோசனை நடத்தியதாக அவர் கூறினார். 

இதையடுத்து, இடைக்கால அரசை அமைப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் பிரதிநிதிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். 

எதிர்கட்சிகள், மாணவர் பிரதிகள் உட்பட அனைவரும் உச்சரித்த ஒரு பெயர், ”முகமது யூனுஸ்”

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்றும், வேறு யாரை நியமித்தாலும் அதனை தாங்கள் ஏற்க மாட்டோம் என்றும் மாணவர் பிரதிநிதிகள் தீர்க்கமாக தெரிவித்தனர். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக யூனுஸ் நியமிக்கப்பட்டார்.

யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசில் 16 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். முகம்மது யூனுஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட சில உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Muhammad Yunus

பொருளாதார வல்லுநர் முகமது யூனுஸ் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

  • வங்கதேசத்தின் ஏழை  மக்களுக்கு கடன் வழங்கும் நோக்கத்துடன் 1976 ஆம் ஆண்டில் யூனுஸ் கிராமின் வங்கியினை (Grameen Bank - கிராம வங்கி) ஆரம்பித்தார். 

  • கடன் ஒரு அடிப்படை மனித உரிமை என்ற நம்பிக்கையை முன்வைத்த அவர், ஏழை மக்கள் அவர்களுக்கு ஏற்ற வகையில் கடன்களை வாங்குவதன் மூலமும், சில நல்ல நிதிக் கொள்கைகளை அவர்களுக்குக் கற்பிப்பதன் மூலமும், அவர்கள் தாங்களாகவே வறுமையிலிருந்து மீண்டு வருவார்கள் என்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவரின் முயற்சிகள் வெற்றிப் பெற்றது. 

  • யூனுஸ், லட்சக்கணக்கான ஏழை மக்கள் வறுமையில் இருந்து மீளும் வகையில் சிறு கடன்கள் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தினார். 

  • ஏழை மக்களின் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெற்றார். இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

Muhammad Yunus
  • நோபல் பரிசு பெற்ற சில மாதங்களிலேயே யூனுஸ் அரசியல் ரீதியான கருத்துகளை சொல்ல ஆரம்பித்தார்.

  • 2007 ஆம் ஆண்டில், வங்கதேசத்தின் பிரதான  ஷேக் ஹசீனா மற்றும் கலீதா ஜியாவின் கட்சிகளைத் தவிர மூன்றாம் பிரதான கட்சியாக யூனுஸ் `Nagorik Shakti ’(குடிமக்கள் அதிகாரம்) என்னும் கட்சியைத் தொடங்கினார், ஆனால் அதிகாரப் போட்டிகளால் ஏமாற்றமடைந்த யூனுஸ் அரசியலிலிருந்து விடைபெற்றார்.

  • அடுத்தடுத்த ஆண்டுகளில், யூனுஸ் ஹசீனா அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார். 

  • 2008ல் ஆட்சிக்கு வந்த ஷேக் ஹசீனா, யூனுஸ் தனது வங்கி நடவடிக்கைகளால் ``ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்” என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.

  • மேலும் யூனுஸுக்கு எதிராக பல வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டது, ஆனால் அவரது ஆதரவாளர்கள் இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கும் உணர்வில் செய்யப்படுவதாகக் கூறினர். வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் அவரின் பலமான எதிரிகள் துன்புறுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஹசீனாவின் இந்த போக்கை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இடைக்கால அரசை அமைத்திருக்கும் யூனுஸ் ஹசீனா பற்றி ஊடகத்திடம் பேசுகையில், ``வங்கதேசம் சுதந்திரமடைந்துள்ளது. அவர் ஒரு சர்வாதிகாரி போல் நடந்து கொண்டார். நாங்கள் இனி அழகான நாட்டை உருவாக்க விரும்புகிறோம்" என்று அவர் கூறினார்.

Bangladesh Protest

இந்தியா குறித்து ஒரு ஊடகத்துக்கு (Indian Express) பேட்டியளித்த யூனுஸ் “ வங்கதேசத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தை இந்தியா, 'உள்நாட்டு விவகாரம்' என சொல்லி ஒதுங்கியது கவலை அளிக்கிறது.  இந்தியாவுடன்  ஹசீனா நெருங்கிய பிணைப்பைக் கொண்டிருந்தார். தன்னுடைய சகோதரரின் வீட்டில் தீப்பற்றி எரிந்தால் அதை எப்படி உள்நாட்டு விவகாரம் என்று கூறுவீர்கள்?" என்று விமர்சித்தார். 

(The Print, BBC, Indian Express உள்ளீடுகளிலிருந்து)