சென்னையின் கிழக்கு பகுதியில் புதுச்சேரி அருகே காற்றழுத்த தாழ்வு (டிப்ரஷன்) உருவாகி, வட மேற்கு நோக்கி நகர்கிறது. இந்த நகர்வினால் தெற்குத் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் மழை அளவு குறைய வாய்ப்பு உள்ளது. அதேப்போல் சென்னையில் கணிக்கப்பட்ட அதிகன மழையும் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு நிலையான டிப்ரஷன் நாளை காலை வட தமிழ்நாடு மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளை கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் நெல்லூரிலும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆனால், எதிர்பார்த்த அளவு மிக அதிக கனமழை இருக்காது என்றே தெரிகிறது.
இன்னும் 2-3 நாட்களில் அரேபியக் கடல் பகுதியில் புதிய குறுகிய அழுத்தப் பகுதி (LPA) உருவாகி, காற்றழுத்தத்தை வலுப்படுத்துவதால், தென் தமிழ்நாடு முழுவதும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.