அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 2024 தேர்தலில் இருந்து விலகியப்பிறகு முதல்முறையாக தொலைக்காட்சி மூலம் பொதுமக்களுக்கு உரை நிகழ்த்தினார். ஜனநாயகத்தை புகழ்ந்து, மறைமுகமாக டிரம்ப்பின் சர்வாதிகாரத்தனத்தை விமர்சித்து, தனது அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருவதைக் குறித்துப்பேசினார் பைடன்.
என்னுடைய தனிப்பட்ட ஜனாதிபதி பதவியைவிட, நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் மிக முக்கியமானது. இந்த முடிவு என்னைப் பற்றியது அல்ல. நாட்டு மக்களான உங்களைப் பற்றியது. உங்கள் குடும்பங்கள், உங்கள் எதிர்காலம் குறித்தது.
நான் மீதம் இருக்கும் பதவிக்காலம் முழுவதும் அதிபராக எனது கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டுமே கவனம் செலுத்துவதுதான் எனது கட்சி மற்றும் நாட்டிற்கு நல்லது என்று நம்புகிறேன். அமெரிக்கா பாதுகாப்பாகவும், வலிமையாகவும், சுதந்திரமாகவும் உள்ளது. கமலா ஹாரிஸுக்கு என்னுடைய நன்றி. அவர் மிகவும் திறமையானவர். துணை அதிபராகத் தனது மிகச்சிறப்பான பங்களிப்பை அளித்தார்
அடுத்த தலைமுறைக்கு பொறுப்பைக் கொடுப்பதே சிறந்த வழி என்று நான் முடிவு செய்துள்ளேன். நம் நாட்டை ஒன்றிணைக்க இதுவே சிறந்த வழி. அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு. இங்கே ராஜாக்களும், சர்வாதிகாரிகளும் ஆட்சி செய்யவில்லை. மக்கள் ஆட்சி செய்கிறார்கள். வரலாறு உங்கள் கையில் உள்ளது. அதிகாரம் உங்கள் கையில் இருக்கிறது. அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த திட்டங்கள் உங்கள் கைகளில் உள்ளது’’ என்று பேசினார் ஜோ பைடன்.