செய்திகள்

அரசு கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... பேராசிரியர்கள் உள்பட 4 பேர் கைது

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 2 பேராசிரியர்கள் உள்பட 4 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

Puviyarasan Perumal

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் அரசு விடுதியில் தங்கி இங்கு பயின்று வருகிறார்கள். 

அந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் சமுதாயத்தில் தங்களுக்கு ஏர்ப்படும் தொந்தரவுகள் குறித்து கேல்விகள் கேட்கப்பட்டது. அப்போது அந்த கல்லூரியில் பயின்று வரும் 7 மாணவிகள், தங்களுக்கு கல்லூரியில் பாலியல் தொந்தரவு இருப்பதாகத் கூறியுள்ளனர். மேலும், தாங்கள் வெளியூர் என்பதால் இங்கு அரசு விடுதியில் தங்கி படித்து வருகிறோம் என்றும் பாலியல் தொந்தரவினால் சரியாக படிக்க முடியவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

அதே கல்லூரியில் பணியாற்றிவரும் 2 தற்காலிக பேராசிரியர்கள், ஆய்வுக்கூட உதவியாளர் மற்றும் என்சிசி பயிற்சியாளர் ஆகியோர் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதும், ஆபாச குறுந்தகவல்களை அனுப்புவது என தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக மாணவிகள் தெரிவித்தனர்.

மாணவிகள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்குழுவினர், வால்பாறை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தற்காலிக பேராசிரியர்களான சதீஷ்குமார், முரளிராஜ், ராஜபாண்டி மற்றும் ஆய்வக உதவியாளர் அன்பரசு ஆகியோர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது. 

அதனையடுத்து, போலீஸ் அவர்களை கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றது. மேலும் இவர்கள் மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.