வயநாடு நிலச்சரிவு 
செய்திகள்

வயநாட்டில் நிலச்சரிவு… 400க்கும் மேற்பட்டோர் சிக்கித்தவிப்பு… மீட்புப் பணிகள் தீவிரம்!

வயநாட்டில் உள்ள மேப்பாடி, முண்டகை, சூரல்மாலா ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட 400க்கும் மேற்பட்டோர் இந்தப்பகுதிகளில் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது

News Tremor Desk

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று முதல் மழை பெய்துவரும் நிலையில் நேற்று இரவும், இன்று அதிகாலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் 200க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாகவும், சடலங்கள் மீட்கப்பட்டுவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வயநாட்டில் உள்ள மேப்பாடி, முண்டகை, சூரல்மாலா ஆகிய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட 400க்கும் மேற்பட்டோர் இந்தப்பகுதிகளில் சிக்கியிருப்பதாகத் தெரிகிறது. மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்படுகிறது. இதுவரை 7 உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனத்தெரிகிறது.