ஹெச்.ராஜா 
அரசியல்

தமிழிசை, வானதிக்கு நோ சொன்ன அண்ணாமலை… ஹெச்.ராஜா தலைமையில் குழு அமைத்த பாஜக தலைமை!

அண்ணாமலை ஃபெலோஷிப் படிப்புக்காக லண்டன் சென்றிருக்கும் நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான ஹெச்.ராஜாவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழு ஒன்றை அமைத்திருக்கிறது பாஜக தலைமை.

kathavarayan

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், பாஜகவின் தமிழ்நாடு தலைவருமான கே.அண்ணாமலை படிப்பதற்காக 3 மாத காலம் லண்டன் சென்றிருக்கிறார். இதற்கு முன்னதாக அண்ணாமலையின் தலைமைப் பதவி பறிக்கப்படும், அவர் மாற்றப்படுவார் என்றெல்லாம் செய்திகள் பரவிய நிலையில் அண்ணாமலையை தேசிய பாஜக தலைமை மாற்றவில்லை. அவர் லாங் லீவில் இருப்பதால் மாநிலத்தில் பணிகளை தொய்வின்றி நடத்த ஹெச்.ராஜாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குழுவில், மாநிலத் துணைத் தலைவர்களான சக்ரவர்த்தி, கனகசபாபதி, மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம், ராம சீனிவாசன், மாநில பொருளாலர் ஆர்.சேகர் ஆகியோர் குழு உறுப்பினர்களாக இருப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை செளந்தரராஜன், தேசிய மகளிர் அணித்தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் சேர்க்கப்படவில்லை என்பதோடு பெண்கள் யாருமே இந்தக் கமிட்டியில் இடம்பெறவில்லை. தமிழக பாஜகவின் முகங்களான இவர்கள் இருவரையும் கமிட்டியில் சேர்க்கக் கூடாது என அண்ணாமலை சொன்னதுதான் காரணம் என்கிறார்கள்.

மீண்டும் ஹெச்.ராஜா தமிழக பாஜகவின் முகமாக மாறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது!