சீமான் 
அரசியல்

‘’விஜயபிரபாகரன் விருதுநகரில் அதிகாரத்தால் தோற்கடிப்பட்டார்… வாக்குகளால் அல்ல'’ - சீறும் சீமான்!

''ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் 'தேர்தல் வெற்றியை வாக்குச்செலுத்துகிற மக்கள் அல்ல தீர்மானிப்பவர்கள்… வாக்கு எண்ணுகிறவன்தான் தீர்மானிக்கிறான்' என்று அப்போதே சொன்னார்'' விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு!

Prakasam

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் அபிநயாவை ஆதிரித்து பொதுக்கூட்டத்தில் பேசினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது அதிமுக, தேமுதிக கட்சிகள் தேர்தலில் போட்டியிடாததால் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னதோடு வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடப்பதாகக் குற்றம் சாட்டினார். 

‘’ரஷ்ய அதிபர் ஜோசப் ஸ்டாலின் தேர்தல் வெற்றியை வாக்குச்செலுத்துகிற மக்கள் அல்ல தீர்மானிப்பவர்கள்… வாக்கு எண்ணுகிறவன்தான் தீர்மானிக்கிறான் என்று அப்போதே சொன்னார். 40 ஓட்டில் அண்ணன் திருமாவளவன் காட்டுமன்னார்கோயிலில் தோற்றார் எனச்சொல்லுகிறது அதிகாரம். அதேப்போல் இப்போது தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகராக இருக்கிற அப்பாவு அவர்கள் 40 வாக்குகள் வித்தியாசத்தில் ராதாபுரத்தில் தோற்றுப்போனார் என்று சொல்ல வைத்தார்கள். 40 ஓட்டெல்லாம் ஒரு ஓட்டா…?

சீமான், வேட்பாளர் அபிநயா

இப்போது விருதுநகரில் அன்புத்தம்பி விஜயபிரபாகரன், கேப்டன் விஜயகாந்த்தின் அன்பு மகன், அவன் வென்றிவிடுவான் என நான் நினைதேன். கடைசிவரை அவன்தான் முந்திப்போய்க்கொண்டிருந்தான். இறுதியில் 4000 ஓட்டில் தோற்றுவிட்டான் என அறிவிக்கச்சொல்கிறது இந்த அதிகாரம். மாவட்ட ஆட்சியர்கள் அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இது சத்தியத்திலும் சத்தியமான உண்மை. இதை யாராலும் மறுக்கமுடியாது.

நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு எண்ணிக்கொண்டே வருகிறார்கள். ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப்பிறகு 8 சதவிகிதத்துக்கு மேல ஓட்டு ஏறல.. ஆறு மணி நேரமா ஒரு ஓட்டுகூட ஏறல.. ஏனென்றால் அதிகாரம் மிக வலிமையானது. ஆனால், இந்த நிலை ஒருநாள் மாறும். இந்தப்புலிகளின் பொறிக்குள் சிக்கிய எலி மாதிரி அந்த திராவிட எலிகள் சிக்கித்தவிக்கல… நீ பார்த்துக்கிட்டே இரு’’ என மேடையில் எப்போதும்போல ஆவேசமாகப் பேசினார் சீமான்.